ArtReviewவில் என் கட்டுரை

லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview பத்திரிகையில் என் கட்டுரை வந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக ArtReview Asia பத்திரிகையில் Notes from Madras என்ற பத்தியை எழுதி வருகிறேன். ஆர்ட்ரெவ்யூ ஏஷியா என்றால் இன்னும் ஒரு பக்கம் கூட கொடுப்பார்கள். இன்னும் வலுவாக இருக்கும் கட்டுரை. இது ஆர்ட்ரெவ்யூ என்பதால் கொஞ்சம் கனம் குறைவாக இருக்கிறதோ என்று எண்ணுகிறேன். சென்ற கோடைக்காலத்து இதழின் கட்டுரையிலும் ஜெயமோகன் பற்றிக் குறிப்பிட்டேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நான் எந்த வெளிநாட்டுப் பத்திரிகையில் … Read more

பூச்சி 120: வரும் போகும்

என் நண்பர்கள் இருவர் ஃப்ரெஞ்ச் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நான் வழக்கம்போல் பாதியில் விட்டு விட்டேன்.  பாதியில் அல்ல; ஆரம்பத்திலேயே.  நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஃப்ரெஞ்சை விட அது முக்கியம்.  ஃப்ரெஞ்சில் இறங்கினால் தினம் இரண்டு மணி நேரம் வீட்டுப் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும்.  தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்காவிட்டால் ஃப்ரெஞ்ச் அல்ல, எதுவுமே வராது.  அதனால்தான் பெண்களிடமிருந்தும், பூனைகளிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறேன்.  ஆனால் நடைப் பயிற்சியின் போது முழுக்க முழுக்க ஃப்ரெஞ்ச் … Read more

முன்னோடிகள் – 20

அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படிக்கும் போது இந்தக் கேள்வி உதித்தது: கோபியின் பல கதைகள் ஒரு பதிவைப் போல உள்ளது. அதாவது கதை என்கிற வடிவில் இல்லை. நம் தமிழ்நாட்டில் வரலாறு என்பதையே இப்படி இலக்கிய வடிவில்தான் அறிகிறோம். பண்டைய தமிழ் நாகரீகம் எப்படி இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களிலும் இதர இலக்கியக்கியங்களிலும்தான் பார்க்கிறோம். ஆனால் மேற்கு நாடுகளில் அப்படியில்லை. கலங்கரைவிளக்கம் ஒன்று ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை வடிவமைத்தவர், கட்டிய … Read more

அடியேனைப் பற்றி அராத்து

என்னைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே ஆகச் சிறந்தது: சாருவும் பொய்யும் இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான போஸ்ட்தான். கவனமாகப் படிக்கவும். சாருவே தான் பொய் சொல்வதாகச் சொல்லப்படுவதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் அது தப்பு. அவருக்கு அவரைப் பற்றி தெரியாது. யாருக்குத்தான் யாரைப்பற்றி தெரிகிறது சாருவுக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையும் சொல்லத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதா ? அவர் டிக்‌ஷனரியில் உண்மை , பொய் என்ற பூலியன் அல்ஜீப்ரா கிடையாது. அது வேறு மாதிரி செயல்படும். … Read more

பூச்சி – 119

அன்புள்ள சாரு, ‘என்ன இன்னும் பதில் வரவில்லையே’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் பூச்சி கட்டுரையிலேயே என் கடிதத்தை பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உண்மைதான். நான் புத்தகங்கள் வாங்கும் முன் பல மதிப்புரைகளைப் படித்து விட்டுத் தான் வாங்குவேன்.  (இது சரியான முறையா என்று தெரியவில்லை.) அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டு பிடித்தேன். ஒரு புத்தகம் வாங்கும் முன் அவர்கள் தளத்தில் அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் … Read more

முன்னோடிகள் – 19

கோபி கிருஷ்ணன் உரைக்காக முழுமூச்சில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  கோபி கிருஷ்ணனை அல்ல.  அவரை ஏற்கனவே பலமுறை படித்து விட்டேன். வெறுமனே புரட்டினால் போதும்.  நான் படிப்பது, இப்போதைய என் பேச்சு ஒரு ஒப்பீட்டு ஆய்வு போல் இருக்கும்.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பேச்சைத் தவற விடாதீர்கள்.  முக்கியமான Gerard de Nerval மற்றும் Arthur Rimbaud.  இவர்கள் பெயரை ஷெரார் தெ நெர்வால் என்றும் ஆர்த்தர் ரேம்போ என்றும் உச்சரிக்க வேண்டும்.  … Read more