பூச்சி 81

இன்று காலை பத்து மணிக்கு இந்தக் கணினியில் அமர்ந்தேன்.  சாப்பிட மட்டும்தான் இடையில் எழுந்தேன்.  முழுநாளும் அல்ஹலாஜின் கவிதைகளில் மூழ்கியிருந்தேன்.  கவிதையா அது.  சந்நதம்.  கடவுளோடு ஒன்றிய நிலை.  பரமஹம்ஸாவின் பித்தநிலை.  அல்ஹலாஜ் சூஃபி கவி மட்டும் அல்ல.  கலகக்காரர். தெருவில் நின்று போராடியவர்.  அடுத்த யேசு.  அந்தக் கட்டுரையை எழுத கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படித்தேன்.  இரண்டு மணி நேரம் கணினியில் பேய் வேகத்தில் தட்டினேன்.  நரம்புகள் தெறித்து விழுந்தன.  ஒரு கிளாஸ் ஒயின் … Read more

பூச்சி 80

இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் – அதிலும் குறிப்பாக கடவுளின் பெயரைச் சொல்லி, ஆன்மீகத்தின் பெயரால் உடலின் இயல்பான இச்சைகளை அடக்க மாட்டார்கள்.  உலகில் உள்ள மதங்களிலேயே உடலை அடக்கி ஒடுக்காத ஒரு மதம் எதுவென்றால், அது இஸ்லாம்தான்.  அதிலும் குறிப்பாக, விசேஷமாக பெண்கள்.  முத்துசாமியின் நீர்மை என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  அசோகமித்திரனின் இருவர் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  லா.ச.ரா.வின் பாற்கடல் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  நீர்மையில் வரும் அந்தப் பெண்மணிக்குப் பெயர் … Read more

என் கருத்தும் இதேதான்…

சட்ட நடவடிக்கை என்ற கட்டுரையில் மட்டும் ஒரு சின்ன கருத்து முரண்பாடு எனக்கு உண்டு. அதில் சென்ற ஆண்டு ஜெ. மீது வழக்குத் தொடுத்த ஒருவரைப் பற்றி மிக உயர்வான கருத்துக்களை ஜெ எழுதியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனை படித்திருந்தாலும் ஒருவர் தன்னை கடவுள் போலவும் மற்றவர்களை அடிமை போலவும் நினைத்தால், அதுவும் அவர் மார்க்சிஸ்டாக இருந்தால், அதிகாரம் கிடைத்தால் அவர் ஹிட்லரைப் போலவே மாவோ போலவோதான் மாறுவார். ஏனென்றால், படிப்பு அவரிடம் ஆயுதமாகச் … Read more

பூச்சி 79

எனக்கு ஒரு கனவு வந்தது.  ஒரு ஆள் என்னிடம் பிச்சை கேட்கிறான்.  அவனை நான் கண்டபடி அடிக்கிறேன்.  நேர்வாழ்வில் அப்படியெல்லாம் நான் வன்முறையில் ஈடுபடும் ஆள் இல்லை என்றாலும் கனவில்தான் தர்க்கம் எதுவும் இருக்காதே?  ஓ, இதைக் கூட பயமாக இருக்கிறது.   நாளை என் மீது கம்யூனிஸ்டுகளோ இந்துத்துவவாதிகளோ பெரியாரிஸ்டுகளோ பிரச்சினை கொண்டு வந்தால் இவன் கனவில் பிச்சைக்காரனை அடித்தவன், மனித விரோதி என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள்.  கனவைக் கூட வெளியே சொல்ல பயமாக இருக்கிறது.  … Read more