எனக்கு ஒரு கனவு வந்தது. ஒரு ஆள் என்னிடம் பிச்சை கேட்கிறான். அவனை நான் கண்டபடி அடிக்கிறேன். நேர்வாழ்வில் அப்படியெல்லாம் நான் வன்முறையில் ஈடுபடும் ஆள் இல்லை என்றாலும் கனவில்தான் தர்க்கம் எதுவும் இருக்காதே? ஓ, இதைக் கூட பயமாக இருக்கிறது. நாளை என் மீது கம்யூனிஸ்டுகளோ இந்துத்துவவாதிகளோ பெரியாரிஸ்டுகளோ பிரச்சினை கொண்டு வந்தால் இவன் கனவில் பிச்சைக்காரனை அடித்தவன், மனித விரோதி என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள். கனவைக் கூட வெளியே சொல்ல பயமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் ஜெயமோகன் விஷயத்தில்தான் வக்கீல் நோட்டீஸெல்லாம் அனுப்புகிறார்கள். என் விஷயத்தில் வக்கீல் நோட்டீஸெல்லாம் அனுப்ப மாட்டார்கள். கேரக்டர் அஸாஸினேஷனில்தான் இறங்குவார்கள். அதற்கு என் கதைகளில் ஏராளமாக சமாச்சாரங்கள் உள்ளன. எனக்கு இங்கே சென்னையில் ஒரு குடும்பம் மட்டும் இல்லாதிருந்தால் பேசாமல் நெதர்லண்ட்ஸ் மாதிரி ஒரு தேசத்தில் போய் அகதியாய் இருந்து விடுவேன். இந்த வக்கீல் நோட்டீஸ், கேரக்டர் அஸாஸினேஷன் போன்ற ஆபாசங்களிலிருந்து தப்பி வாழலாம். என் கதையில் ஒருத்தன் கொலை பண்ணினால் சாரு கொலைகாரன் என்கிறார்கள் தமிழ் இலக்கிய விமர்சகர்கள். நல்லவேளை, ஜெயமோகனின் கதைகளில் இந்த மாதிரி ட்ரான்ஸ்கிரஸிவ் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் இவர் சிவாஜியை கிண்டல் பண்ணினார் எம்ஜியாரைக் கிண்டல் பண்ணினார் என்று ஜல்லி அடிக்கிறார்கள்.
சரி, கனவுக்கு வருகிறேன். என்னிடம் பிச்சை கேட்டவனைக் கண்டபடி அடிக்கிறேன். உடனே சுற்றியிருந்தவர்கள் “யோவ், பிச்சை போடலைன்னா போ, அதுக்கு ஏய்யா அடிக்கிறே?” என்று என்னைத் திட்டுகிறார்கள். உடனே நான் பிச்சைக்காரனின் கையில் இருக்கும் தங்கத்தினால் ஆன திருவோட்டைக் காண்பித்து ”இதை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இவனை அடிக்காமல் என்ன செய்வது?” என்கிறேன். நியாயம் கேட்க வந்தவர்கள் இப்போது என்னை விட்டு விட்டு பிச்சைக்காரனைப் பிடித்துக் கொள்கிறார்கள். டேய் முட்டாப்பயலே…
என்னுடைய நட்பு பிடிக்காமல் என்னை விட்டு விலகிச் செல்பவர்களை நான் அந்தப் பிச்சைக்காரனைப் போல்தான் பார்க்கிறேன். அட மூடர்களா, ஒரு தங்கப் பாத்திரத்தைத் தூக்கிப் போட்டு விட்டுப் போய் காசுக்கு அல்லாடுகிறீர்களே? உங்களைப் பற்றி எந்த நியாய சபையில் முறையிடுவது? ஆம், நாலு ஜென்மம் எடுத்தாலும் படித்துத் தீர்க்க முடியாததை இந்த ஒரு ஜென்மத்தில் படித்து எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இது வேண்டாம் என்று ஓடுபவர்களை என்னவென்று சொல்வது?
உதாரணத்துக்குத்தான் தங்கம் என்றேன். அள்ள அள்ளத் தங்கம் குறையும். ஞானமோ பெருகும். அது வேண்டாம் என்கிறார்கள். நல்லது. எல்லாவற்றையும் எழுதி விட முடியாது. எந்த ஒரு கலைஞனும் தத்துவவாதியும் தான் எழுதியது போல் பத்து இருபது மடங்கு செல்வத்தை எழுதாமலே தன்னோடு கொண்டு போகிறான். ஆனால் அதுவும் கூட அவனோடு நேரில் பழக வாய்த்திருக்கும் மாணாக்கர்களுக்குக் கிடைக்கும். இது பற்றி நானே சொல்லிக் கொள்வதை விட சீனி, புவனேஸ்வரி, செல்வா, ஸ்ரீராம், காயத்ரி போன்ற நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். எழுத்தின் மூலம் தெரிய வரும் சாரு ஒரு சின்ன தீற்றல்தான். நேரில் தெரிவதே நிஜ வனம். ஆனால் பல தசாப்தங்கள் பழகியும் என்னிடமிருந்து எதுவும் பெறாதவர்களும் உண்டு. காரணம், அவர்கள் என்னிடம் எதையும் பெற விரும்பவில்லை. காரணம், என்னை அவர்களுக்கு யார் எனத் தெரியாது. இந்தப் பின்னணியில் என்னுடைய புதிய நண்பர் பாலாவுடன் நடந்த சிறிய கடிதப் பரிமாற்றத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர் பற்றிய அறிமுகம் அவரது கடிதங்களிலேயே உண்டு. என்னை அப்பா என அழைக்கும் ஒருசில நண்பர்களில் பாலாவும் ஒருவர்.
அப்பா,
அப்பா என அழைக்க அனுமதியளித்ததற்கு மிக்க நன்றி. இத்தனை ஆண்டுகள் உங்களிடமிருந்து ஒளிந்தே இருந்ததற்கு முதலில் மன்னிக்கவும்.
முதல் முறை பேசினாலும், மிக நெருக்கமான, நீண்ட நாள் தொடர்பில் இருந்ததான உணர்வு இருந்தது. அதற்குக் காரணம், நீங்களே அடிக்கடி சொல்வது போல, நீங்களும், உங்கள் எழுத்தும் வெவ்வேறானவை அல்ல என்பது தான்.
என்னை உருவாக்கியதில் எந்த அளவு உங்கள் எழுத்து இருந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது என்பதை என்னாலேயே தெளிவாகச் சொல்வது கடினம். இரண்டறக் கலந்த நிலை அது. பிரமிப்பிலிருந்து மீண்ட பிறகு, மீண்டும் ஒருநாள் உங்களிடம் பேசுகிறேன்.
தனிமை வேண்டிதான் பெல்ஜியம் வந்தேன். கேட்டதைக் காட்டிலும் அதீதமான தனிமையை, இந்த கொரோனா வழங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு வந்த சில மாதங்களில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் கூடப் பெரும்பாலும் பார்களில் எதேச்சையாக சந்தித்தவர்கள் தான். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன் கதவுகளை என்றும் மூடியிராத லூவனின் பார்கள் மீண்டும் திறப்பதற்காகக் காத்திருக்கிறோம்.
பாலா
மார்ச் 19, 2020.
டியர் பாலா,
லூவன் நகரை யூட்யூபில் பார்த்தேன். சொர்க்கம் மாதிரி இருந்தது. ஆனால் தற்சமயம் மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கும் லூவனை நினைத்தால் பயமாக இருக்கிறது. கட்டிடங்களின் பிரம்மாண்டமும் நேர்த்தியும் பிரமிக்க வைக்கிறது. ஒரே ஒரு லட்சம் ஜனத்தொகை. இங்கே தமிழ்நாட்டில் எறும்புக் கூட்டத்தைப் போல் வாழ்ந்து விட்டு அங்கே ஒரு லட்சம் ஜனத்தொகையில்… நினைக்கவே முடியவில்லை. குளிர்காலத்தில் அங்கே இருந்திருப்பீர்கள். அங்கே போனவுடன் குளிர்காலமாக இருந்திருக்கும். பனிப் பொழிவு இருந்ததா? சைக்கிள் வைத்திருக்கிறீர்களா?
எனக்குத் தெரியாமலேயே – ஒரு கடிதப் போக்குவரத்து கூட இல்லாமலேயே – உங்களைப் போல் பலர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அபிஸிந்த் மது ஆளைத் தூக்கும் சரக்கு. அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லது அதைத் தொடாமலேயே இருக்கலாம். ஆல்கஹால் சேர்க்கை அதில் மிக அதிகம்.
கொரோனா போனதும் அங்கே வருவேன்.
என்னுடைய மார்ஜினல் மேன் ஆங்கில நாவலை (எக்ஸைல் மொழிபெயர்ப்பு) ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன். அங்கே பல்கலைக்கழக நூலகத்தில் வைக்க இயலுமா என்று கேட்டுப் பார்க்கவும்… இல்லாவிட்டால் அரவிந்த் அடிகா, சல்மான் ருஷ்டி, அமிதாவ் கோஷ், அருந்தது ராய் தவிர வேறு இந்திய எழுத்தாளர்களை அந்த ஆட்கள் எப்போதுதான் படிக்கப் போகிறார்கள்?
சாரு
மார்ச் 19, 2020.
அப்பா,
உண்மை தான். கல்லூரி விடுமுறை காலங்களில், நகரமே சற்று வெறிச்சோடித் தான் இருக்கும். அதுவும், நான் வந்த சமயம் பனிக்காலம் (ஆனால், ஒரே ஒரு நாள்தான் பனி பொழிந்தது!) என்பதால், நகர மையத்தில் கூட சில நேரங்களில் மனிதர்களைக் காண்பது அபூர்வம். ஆரம்ப நாட்களில், இரவுகளில் நிலவும் பேரமைதி விசித்திரமாக இருந்தது, நான் மூச்சு விடும் ஓசை எனக்கே கேட்குமளவிற்கு. பனிக்காலத் தனிமையும், அப்பாவின் அகால மரணமும் சேர்ந்து இங்கு இருப்பை இன்னும் வெறுமைக்குள் தள்ளிய போது இசையும், நடனமும், பியரும் (அபிஸிந்த் இங்கு இதுவரை இரண்டு முறை மட்டுமே குடித்திருக்கிறேன்), எதேச்சையாக பார்களில் நிகழும் பல உரையாடல்களும் அந்நாட்களைக் கடக்க வைத்தன.
இந்தியா, சிங்கப்பூர் என மனிதத் திரள்களில் இருந்து விட்டு, மனித நடமாட்டம் இல்லாத இந்தச் சிறிய ஊரில் இருப்பது புதிய அனுபவம்தான். பல்கலைக்கழகம் எனக்கு ஒரு சைக்கிள் தந்திருக்கிறது. என்னுடைய பேராசிரியர் கூட தினமும் எட்டு கிலோமீட்டர் சைக்கிளில்தான் வருகிறார். ஒவ்வொரு முறை சைக்கிளை ஓட்டும் போதும், ஏதோ பள்ளிக்காலங்களுக்கு சென்று விடுகிற மனநிலை. வசந்தம் தொடங்கி, பூக்கள் மலரத் தொடங்கியிருக்கும் இந்த நேரம் பார்த்து, இந்த கொரோனா குறுக்கே நின்று தொலைக்கிறது.
சிறிதானாலும், லூவன் நகரம் வரலாற்றுச் சிறப்பு உடையது. முக்கியமாக பல்கலைக்கழகம் (KU Leuven) 1425-இல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் பழமையான அதன் நூலகம் மீது இரண்டு உலகப் போர்களின் போதும் குண்டு வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் எரிந்து போயிருக்கின்றன. மிகச் சரி, Marginal Man கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும். தற்போது, நூலகத்தை, பல்கலைக்கழகத்தை என அனைத்தையும், கொரோனா காரணமாக மூடியிருக்கிறார்கள். நிலைமை சரியானதும் நான் சென்று கேட்கிறேன். அதன் பிறகு உங்களிடம் தெரிவிக்கிறேன். ஒத்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் சொன்னது போல, கண்டிப்பாக எந்தத் தொடர்பும் இல்லாமல் என்னைப் போல பல வாசகர்கள் இருப்பார்கள். நான் அரூ-வில் இல்லாமல் போயிருந்தால், நானும் தெரிந்திருக்க மாட்டேன். உங்களுக்குக் கடிதம் எழுதுவது கூட உங்களுக்குத் தொந்தரவாக இருக்குமென்று அதையும் தவிர்த்திருக்கிறேன்.
கொரோனா காலம் முடியட்டும். உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
பாலா
மார்ச் 20, 2020.
அப்பா,
உங்கள் கேக் கட்டுரையைப் படித்தேன். நேரில் பழகாததால் நீங்கள் எழுதியிராத எவ்வளவோ ஞானத்தைத் தவற விட்டிருப்பது புரிந்தது. ஒருவேளை, சென்னையில் வசித்திருந்தால் கண்டிப்பாக என்றோ உங்களை வந்தடைந்திருப்பேன்.
நேற்று மதியத்திலிருந்து என்னுடைய கட்டிடத்தில் இன்டர்நெட்டும் மின்சாரமும் வேலை செய்யவில்லை. இங்கு வந்த நான்கு மாதங்களில் இப்படி ஆவது இதுவே முதல்முறை. மின்சார அடுப்பானதால், சமைக்க வழியின்றி, ரொட்டிகளை வைத்து நாளை ஓட்டவேண்டியிருந்தது. அதுவொன்றும் அத்தனை சிரமமானதாக இல்லை. மாலையிலிருந்து இருளில் அமர்ந்து படிப்பது மட்டுமே கண்களுக்குக் கடினமாக இருந்தது. The pedestrian நீங்கள் பரிந்துரைத்த பிறகுதான் படித்தேன். அற்புதமான கதை. உலகின் கடைசி மனிதனாக எஞ்சியிருப்பதைப் போன்ற எண்ணம், அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறது.
இன்றுடன் அறையை விட்டு வெளியேறி ஆறு நாட்களாகின்றன. எந்த வருத்தமும் இல்லை. சொல்லப் போனால், கொண்டாட்டமாகவே இருக்கிறது. இன்று நாள் முழுக்க ஜிப்ஸி இசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். Esma Redzepova-வில் தொடங்கிய பயணம், Barcelona Gipsy Klezmer Orchestra (https://www.youtube.com/watch?v=LCUv9W0ViRc) என்கிற சமீபத்திய இசைக்குழுவின் பாடல்கள் என ஒரு வித trance நிலையிலேயே கழிந்தது.
இதே நிலை இங்கு இன்னும் எட்டு வாரங்களுக்காகவாவது நீடிக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் இதன் பரவல் அதிகமாகியிருப்பதாக அறிந்தேன். இங்கு இருப்பதை விட தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பல மடங்கு சிறப்பாகவே இருக்கின்றன. என்னுடைய அம்மா மற்றும் அத்தை, முப்பது வருடங்களுக்கு மேலாக அத்துறையில் பணிபுரிந்த வகையில் அதன் செயல்பாடுகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்தக் கலவரங்கள் முடிந்த பிறகு, உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன். அதற்குள், பனிக்காலம் வந்துவிடக் கூடாதென வேண்டிக்கொள்கிறேன். நான் இந்தியாவிற்கு செப்டம்பரில் செல்வதாக ஒரு திட்டம் இருந்தது. தற்போது எதுவும் நிச்சயமின்றி இருக்கிறது.
என் பெயரையோ, தகவல்களையோ, எங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம். உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
அதிகம் பேசியிருந்தால் மன்னியுங்கள்.
அன்புடன்,
பாலா.
மார்ச் 23, 2020.
***
சில நண்பர்கள் PayPal மூலம் பத்து டாலர் அனுப்புகிறார்கள். அதில் முக்கால் டாலர் கமிஷன் போக மீதி ஒன்பதேகால் டாலர் என் கணக்கில் வருகிறது. ஆனால் அதை என் வங்கிக் கணக்கில் சேர்க்க பல தினங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பத்து டாலர்தான் குறைந்த பட்சமாம். அது எப்போது பத்து டாலராக ரொம்புகிறதோ அப்போதுதான் என் வங்கிக் கணக்கில் சேரும். புரியாத விஷயம் என்னவென்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இங்கே குதித்து விடும் பணம் ஒரு முக்கால் டாலரால் கணக்கில் சேர மாட்டேன் என்கிறது. இந்த சுவாரசியமான விஷயத்தை இன்றுதான் கவனித்தேன். பணப் பரிமாற்றத்தில்தான் எத்தனை விளையாட்டுகளை வைத்திருக்கிறார்கள்!
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai