இன்று காலை பத்தரை மணிக்கு மதிமுகம் நேர்காணல்

இந்தப் புத்தக விழாவின் காரணமாக எதற்குமே நேரமில்லாமல் இருக்கிறது. முதல் விஷயம் முதலில். இப்போது காலை பத்தரை மணிக்கு மதிமுகம் தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. அபிநயா ஸ்ரீகாந்த் எடுத்த நேர்காணல். அபிநயா அனுப்பிய செய்தியில் நேர்காணலைப் பார்க்கச் சொல்லியிருந்தார். எனக்கு என் உடல்மொழியோ குரலோ பேசும் முறையோ எதுவுமே பிடிக்காது. இதுவரை என் நேர்காணல் எதையுமே நான் பார்த்ததில்லை. என் அழகான முகத்தையும் வேறு சில அவயவங்களையும் என் எழுத்தையும் தவிர என் சம்பந்தப்பட்ட எதுவுமே … Read more

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது…

பின்வரும் கட்டுரையை 2014-ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி எழுதியிருக்கிறேன். நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. இக்கட்டுரை பிறகு கடைசிப் பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து யாருமே படிக்காமல் காணாமல் போய் விட்டது. 200 பிரதி விற்றிருந்தால் அதிகம். இந்தப் புத்தக விழா முடிவதற்குள் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். இன்று இந்நூலின் பிழை திருத்தம் செய்து முடித்து விட்டேன். ஓரிரு தினங்களில் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கிடைக்கும். அரங்கு … Read more

புத்தக விழா – 8

பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  எதை முதலில் எழுதுவது என்றே புரியவில்லை.  எல்லாமே முதலில் முதலில் என்று முட்டிக் கொண்டு வருகிறது.  ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.  நேற்று நாலு மணிக்கு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாக்கி ஷோ ரூம் வாசலில் நிற்பேன் என்று எழுதியிருந்தேனா?  சரியாக நாலு மணிக்கு என் நண்பர் ஷிவா வந்து நின்று விட்டார்.  அவர் எனக்கு அனுப்பிய போன் மெஸேஜைப் பார்க்க எனக்கு நேரமில்லை.  பிறகுதான் பார்த்து “திட்டம் மாறி விட்டது; … Read more

புத்தக விழா 7

அராத்துவின் ப்ரேக் அப் குறுங்கதைகள் புத்தகத்தின் பின்னட்டையில் பின்வரும் வாசகத்தைக் கண்டேன். “பித்துப் பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.” மேற்கண்ட வாக்கியத்தில் இரண்டு இலக்கணப் பிழைகள் உள்ளன. ஒரு பிழையை நானே சொல்லி விடுகிறேன். அது சுலபம். எழுதப்பட்டிருக்கின்றன. இதை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இன்னொரு பிழையை இதை விட சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன். மேலும், இப்போதெல்லாம் பின்னட்டையில் பிழை இல்லாத ஒரு … Read more

புத்தக விழா 6

சிலர் என்னைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்கள். சிலர் கட்டியணைக்காமல் முத்தமிடுகிறார்கள். சிலர் பாதம் தொட்டு வணங்குகிறார்கள். பாக்யராஜ் என்ற வாசகர் “உங்கள் கன்னத்தைக் கிள்ளிக் கொள்ளவா?” என்று கேட்டார். இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இல்லை. இருபாலரும். இது யாவற்றையும் ஒன்றே போல் கருத என்னைப் பக்குவப்படுத்து பெருமாளே என்று வேண்டிக் கொண்டேன். அதிலும் பாதம் தொட்டு வணங்கும் போது என்னிடம் உள்ள ஒருசில ஆசாபாசங்கள் கூட என்னை விட்டு அகல்வதை உணர்கிறேன். என் பாதம் பணிவதை என்னைப் … Read more