ஞானமும் குண்டாந்தடியும்

Alain Robbe-Grillet எழுதிய சுயசரிதை Ghosts in the Mirror புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாங்கித் தருவதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தருவதற்குத் தோதான நண்பர்கள் கிடைக்கவில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான போக்குவரத்து கம்மியாகி விட்டதோ என ஐயுறுகிறேன். வரக் கூடிய நண்பர்கள் யாரும் இருந்தால் எனக்கு எழுதுங்கள். அல்லது, எங்காவது நூலகத்தில் இருந்தாலும் தகவல் தாருங்கள். எப்பாடு பட்டாவது ஏதோ ஒரு நூலகத்திலிருந்து எனக்குத் தேவைப்படும் … Read more

ghosts in the mirror

Ghosts in the Mirror புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் வாங்கி அனுப்புவதாகச் சொல்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இந்தியாவுக்கு சமீபத்தில் வருகிறீர்களா? வந்தால் உங்கள் விலாசத்துக்கு புத்தகம் வந்து சேரும். நீங்கள் இந்தியா வரும்போது எனக்குக் குரியரில் அனுப்பி விடலாம். இருந்தால் சொல்லுங்கள்.

இரண்டு புத்தகங்கள்: ஆங்கிலத்தில்

My Life, My Text என்ற என் சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதோடு கூடவே இன்னொரு நேர்காணலும் உருவாகி வருகிறது. நேர்காணலை நடத்திக்கொண்டிருப்பவர் அசோக் கோபால். அம்பேத்கர் பற்றிய ஆய்வு நூலை எழுதியவர். அந்த நேர்காணலையும் ஆங்கிலத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் நூலுக்காக உலகத்தில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான, எனக்குப் பிடித்தமான சுயசரித்திரங்களைப் படித்து வருகிறேன். குறிப்பாக, பெர்க்மனின் The Magic Lantern, ஆந்த்ரே டர்காவ்ஸ்கியின் The Sculpting in Time, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றி அவரது … Read more

My Life, My Text: Episode 05

இனிமேல் நான் ஆங்கிலத்தில் அதிகம் எழுத முடிவு செய்திருக்கிறேன். அடுத்த ஆண்டிலிருந்து என் புனைவுகளையும் நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவது என்றும் இன்னொரு முடிவு. என் சுயசரிதையின் ஐந்தாவது அத்தியாயம் இது: My Life: My Text – Episode 05 Prakash bought the blade and said, Do it carefully da. – The Asian Review (asian-reviews.com)

நதீகா பண்டாரவின் ஹா ஹா ஹா உல்லாச விஷாத: நாடகம்

நான் இலங்கை சென்றிருந்தபோது கேகே சமன் குமரவுடனும் நதீகாவுடனும்தான் தங்கியிருந்தேன். அந்த அனுபவங்களையே என் உல்லாசம் உல்லாசம் நாவலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் நதீகாவின் பகுதி பலஹீனமாக இருப்பதாக சீனி சொன்னதால் அதை இன்னும் வலுவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் தில்லியில் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்ததால் சர்வதேச நாடகப் போக்குகள் பற்றி அறிவேன். நாடகத் துறை இன்னும் நான் நினைக்கும் அளவு வளரவில்லை. என்னுடைய நாடகத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக வர வேண்டும் என்றால், உடலுறவுக் காட்சிகள் … Read more

ஷ்ருதி டிவி சாதனை

ஷ்ருதி டிவி பத்து லட்சம் வாசகர்களை அடைந்திருக்கிறது. கபிலனுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாழ்த்துகள். ஷ்ருதி டிவி தமிழ் இலக்கிய உலகில் ஒரு மகத்தான சாதனை. ஷ்ருதி டிவி இல்லாவிட்டால் என்னுடைய மேடைப்பேச்சுகள் எதுவுமே வாசகர்களைச் சென்றடைந்திருக்காது. சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் வாசகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை ஷ்ருதி டிவி கபிலனுக்குரியது. அவர் ஒரு கோடி வாசகர்களை விரைவிலேயே அடைய வாழ்த்துகிறேன்.