அமேத்திஸ்டில் பூனையுடன் ஒரு விருந்து…

அமேத்திஸ்டில் சமீபத்தில் அராத்துவைச் சந்தித்தேன்.  அது பற்றி அவர் முகநூலில் எழுதிய பதிவு இது: “சாருவின் மனநிலையைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். முந்தா நாள் அவரைப் பார்க்க அமேதிஸ்ட் சென்றிருந்தேன். அவரை பார்க்க மட்டும் தான் அங்கே செல்வது! நவீன கிளியோபாட்ராக்களைக் கூட சாலையோர தேநீர்க்கடைகளில் தான் சந்திப்பது. சாரு, ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்தார். ரூ 495 /- நான் ஒரு மரினாரா பீட்சா ! அதுவும் 495 /- சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு … Read more

Other is Hell

இளையராஜா ரமணர் பற்றியும் இயேசு பற்றியும் உளறியிருப்பதைப் படித்தேன். இதைப் போலவேதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி பற்றியும் உளறினார். அதை உளறல் என்று நான் சொன்னதும்தான் இளையராஜா பைத்தியத்திலிருந்த தமிழ்நாடே என்னைப் போட்டுத் துவைத்து எடுத்தது. இப்போது இளையராஜா பைத்தியம் கொஞ்சம் விலகி விட்டதால் அவருடைய உளறல்களை பலரும் உளறல் என்று புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சாஸ்த்ரீய சங்கீதம் தவிர வேறு எதுவுமே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம் … Read more

அசோகமித்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் உரை

நேற்று நடந்த அசோகமித்திரன் நினைவு கூட்டத்திற்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் 365 தினங்களும் சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரங்கம் நிறைந்து விடும். அவர்கள் மட்டுமே நேற்றும் வந்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வாசகர் வட்ட அட்மின் ஸ்ரீராமும் மற்றும் இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாத என் பார்க் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். நன்றி. இனிமேல் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள். அசோகமித்திரன் எனக்கு மாதா பிதா குரு தெய்வமானவர். அவர் பற்றி நான் நேற்று … Read more