போட் கிளப்

நேற்றைய குறிப்பில் போஜன் பற்றி அதிகம் எழுதவில்லையே என்று ராமசேஷன் சொன்னார்.  வாஸ்தவம்தான்.  நாகேஸ்வரராவ் பூங்காவின் எதிரே வலது கைப்பக்கம் போனால் ஒரு சந்துக்குள் நுழையும்.  அங்கே ஃபோர்க் மாதிரி வலது இடது என்று இரண்டு பாதைகள் பிரியும்.  போட் கிளப் போட் கிளப் என்கிறார்களே, அதற்கு சவால் விடுவது போல் இருக்கும் அந்த இடம்.  ம்ஹும்.  உடனே போட் கிளப் மாதிரி மாட மாளிகை என்று கற்பனை செய்து விட வேண்டாம்.  போட் கிளப்பில் நடப்பது … Read more

அமெரிக்க ஜனநாயகம்

நானும் ராகவனும் ராமசேஷனும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு காலைச் சிற்றுண்டிக்காக பூங்கா எதிரில் உள்ள தளிகை உணவகம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.  ஆனால் தளிகையில் உணவு நன்றாக இல்லை.  காப்பியோ படு மோசம்.  மஹா முத்ராவில் உணவு நன்றாக இருக்கும்.  ஆனால் எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள்.  மட்டுமல்லாமல் அங்கே ஆள் பற்றாக்குறை உண்டு.  செஃப் தாமதமாக வரும்.  சாப்பிட்டு முடித்து வெளியே வரவே ஒன்பதரை ஆகி விடும்.  அதாவது எட்டு மணிக்குப் போனால்.  … Read more

ராஸ லீலா – collectible

ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்துக்குப் பணம் அனுப்ப ஜூன் முதல் வாரம் வரை நீட்டிக்கச் சொல்லி சில நண்பர்கள் கேட்டுக் கொண்டுள்ளதால் அப்படியே ஜூன் முதல் வரை நீட்டிக்கிறேன். ஷார்ஜா, துபாய், குவைத் நண்பர்களில் மூன்று பேர் மட்டுமே பணம் அனுப்பி இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர். ஆச்சரியமாக இருந்தது. என்ன ஆச்சரியம் என்றால், எனக்கு வரும் கடிதங்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.  என் வாழ்வையே மாற்றி அமைத்து விட்டீர்கள்; ஆஹா ஊஹூ…  ஆனால் … Read more

லூசிஃபர்

“என் மகள் காலை ஆறரை மணிக்கு ஏதோ ஒரு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலைநாள் வேறு.  இதெல்லாம் சரியா என்று கேட்டு திட்டினேன்.  போப்பா, இதெல்லாம் உனக்குப் புரியாது, உன் வேலையைப் பார் என்று சொல்லிவிட்டாள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நண்பர்.  ஜிஓடி தானே பார்த்தாள் என்று கேட்டேன்.  இல்லை; ஏதோ கேம் என்று வந்தது என்றார்.  ”அட என்னங்க நீங்க, இந்த அளவுக்கு generation gap ஆகிப் போச்சு உங்களுக்கு?  கேம் ஆஃப் த்ரான்ஸ் என்றெல்லாம் … Read more

வனம் ஏகுதல்

வனத்துக்குச் செல்லும் போது உங்கள் கண்களையும் செவிகளையும் இறுக மூடிக்கொண்டு செல்லாதீர்கள். வனத்திலிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது. இந்த வாக்கியத்தின் ஆரம்பத்தில் “நான் உங்களுக்குத் தீர்மானமாய்ச் சொல்லுவேன்” என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அது தீர்க்கதரிசிகளின் மொழி என்பதால் ரத்து செய்து விட்டேன்.

பாபாவிடம் ஒரு பிரார்த்தனை!

என் சக எழுத்தாளர் ஒர்த்தர் எழுதினார். ஒரு கோவில் திருவிழாவில புள்ள இல்லாத பொம்பளைங்கள்ளாம் கூடி அங்கெ சுத்திக்கிட்டிருக்கிற பசங்களோட “கூடி” புள்ள பெத்துக்குவாங்க. இதான் இந்தக் கோவில் திருவிழாவுல பழக்கம். எந்த ஜாதிப் பொம்பளைங்க, எந்த ஊர்க் கோவில்னும் பேர் ஊர் போட்டு எழுதினதால எழுத்தாளரைக் கொலை பண்ணப் போறோம்னு ரெண்டு மூணு பேர் கிளம்ப, உடனே கம்யூனிஸ்ட்காரங்க இதை இந்தியா பூராவும் எடுத்துட்டுப் போனாங்க. ஊர் ஒலகம்லாம் ஒரே சப்போர்ட்டு. மேட்டர் நியூயார்க் டைம்ஸ்லேல்லாம் … Read more