தீபாவளி வாழ்த்துக்கள்…

நாம் மேற்கத்திய நாகரீகத்தை அரைகுறையாகக் காப்பியடித்துப் பின்பற்ற ஆரம்பித்ததிலிருந்து வாராவாரம் சனிக்கிழமை செய்யும் எண்ணெய்க் குளியலை அடியோடு மறந்து போனோம்.  ஒரு ஆடவனுக்கு இளமையில் தாயும், பிற்பாடு தாரமும் எண்ணெய்க் குளி செய்விப்பார்கள்.  இதில் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  தலைக்கு செமத்தியான மஸாஜ் கிடைத்தது.  தலைக்கு மஸாஜ் செய்து கொள்வது தேக நலத்துக்கு எவ்வளவோ நல்லது.  இதையெல்லாம் நம் முன்னோர் ப்யூட்டி பார்லர் வைத்து மஸாஜ் செய்து கொள்ளவில்லை.  தானாக, வெகு இயல்பாகவே அது நம்முடைய அன்றாட … Read more

ஜெயமோகனின் ’இமாலயப்’ பொய்கள்

ஒரு கட்டுரையில் சில பிழைகள் இருப்பது சாதாரணமான விஷயம்தான்.  ஆனால் ஜெயமோகன் தனது இணைய தளத்தில் எழுதும் இமயமலைப் பயணத் தொடரில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏராளமான பிழைகளைச் செய்வதால் அவர் லே நகரை மட்டும் பார்த்து விட்டு இமயமலைப் பயணத் தொடரை எழுதி வருவதாகப்  பலரும் கருதுகிறார்கள்.  இது பற்றி நானும் ஒன்றும் கவலைப்படவில்லை.  இமயமலை ராஜஸ்தானில் இருக்கிறது என்று கூட எழுதட்டும், நமக்கென்ன என்றே இருந்தேன்.  ஆனால் பல லட்சம் பேர் படிக்கக் கூடிய தி … Read more

தி இந்து – தீபாவளி மலர் குறித்து : செல்வகுமார் கணேசன்

வாசகர் வட்டத்தில் செல்வகுமார் எழுதியிருப்பது: தி இந்து-தீபாவளி மலரில் சாரு எழுதிய பக்கங்கள் மட்டும் கலர் ஃபுல்லாக இருக்கு. (பின்னே, தமிழ் சினிமாவின் கதாநாயகிகளை பற்றி அல்லவா எழுதியிருக்கிறார்) நஸ்ரியாவை, த்ரிஷாவை பற்றி சாருவை தவிர வேறு எந்த முன்னணி இலக்கியவாதியும் கருத்து சொல்வார்களா என்பது சந்தேகமே. அவர்களின் கௌரவ வேடமே அதை தடுத்துவிடும். உ.த.எ இமயமலை பற்றி கொஞ்சமும், வரலாறு, புவியியல், ராணுவம், சுயபோகம், சாரி, சாரி, சுய அனுபவம் குறித்து அதிகமாகவும் ஒரு கட்டுரை … Read more

ரிஷி மூலம்

இப்போதைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கும்.  அந்த அளவுக்கு சமகாலத் தமிழ் எழுத்து சோர்வடையச் செய்வதாக உள்ளது.  இருந்தாலும் நல்ல எழுத்து வரும் போது நான் அதைப் படிக்கத் தவறுவதில்லை.  அப்படி நான் வேண்டி விரும்பிப் படிக்கும் ஒருவர் தேவி பாரதி.  அவருடைய காந்தி என்ற நீண்ட சிறுகதையை காலச்சுவடில் படித்த போது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன்.  அவருடைய கிராமமான வெங்கரையாம்பாளையத்துக்கு நேரில் சென்று அவரோடு தங்கியிருந்து … Read more