தேகம் – நூல் விவாத நிகழ்வு – இன்று மாலை

  அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வடசென்னை, திருவொற்றியூர் பகுதியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நண்பர்களின் முன்முயற்சியில், ‘மாற்றுக்களம்’ என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக சமஸின் ‘கடல்’, மற்றும் சாரு நிவேதிதாவின் ‘தேகம்’ நாவலை முன்வைத்து ச. வெங்கடேஷ் மற்றும் சாரு சக்தி முறையே பேசுகிறார்கள். புத்தக வாசிப்பையும், உரையாடலையும் தொடங்குவோம். புத்தக வாசிப்பை இயக்கமாக மாற்றுவோம். புத்தக வாசிப்பே ஒரு மனிதனை, முழுமையான மனிதனாக மாற்றுகிறது. வாய்ப்புள்ள தோழர்களை கலந்துக் கொள்ளும்படி அழைக்கின்றோம். நாள்: … Read more

பிரபு காளிதாஸின் நாவல்

கடுமையான வேலை நெருக்கடிக்கு இடையில் இருந்தேன். பிரபு காளிதாஸ் தான் எழுதியிருந்த நாவலின் மென்பிரதியை அனுப்பியிருந்தார். முழுசாக பிறகு படிப்போம்; இப்போதைக்கு முதல் இரண்டு பக்கங்களைப் படிப்போம் என்று ஆரம்பித்தேன். பாதியில் நிறுத்தவே முடியவில்லை. தமிழில் இப்படி ஒரு நாவலை இதுவரை படித்ததில்லை. இந்த அளவு எழுதுவார் என்று நான் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சிறுகதை எழுதுவது சுலபம். நாவல் அப்படி அல்ல. சிறிய நாவல்தான். 25,000 வார்த்தைகள். ஆனால் இந்திய வாழ்க்கையை மற்ற … Read more

முராகாமியின் ‘விநோத நூலகம்’

செப்டெம்பர் 28, 2016 இலக்கிய வாசகர்கள் ஹாருகி முராகாமி (இதுவே சரியான உச்சரிப்பு) பற்றி கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆர்வமில்லை. கூச்சல் அந்த அளவுக்கு இருந்தது. எங்கே போனாலும் முராகாமி, முராகாமி, முராகாமி. முகச்சுளிப்பே ஏற்பட்டது. நோபல் பரிசு பெறாமலேயே நோபல் பரிசு பெற்றவர்களை விட அதிக அளவு பேசப்பட்டு விட்டார் முராகாமி. அதிக அளவு புகழ் அடைந்தவர்கள் அதிக அளவு கலா சிருஷ்டி இல்லாதவர்கள் என எனக்கு ஒரு எண்ணம். ஹே … Read more

தினமலர் மற்றும் தினகரன் தீபாவளி மலர்கள்

தினகரன் தீபாவளி மலரில் சாரு நிவேதிதாவின் பேட்டி வெளியாகியுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. நண்பர்கள் படிக்கவும். தினமலர் தீபாவளி மலரில் ‘சினிமாவும் இலக்கியமும்’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நாளை (27.10.16, வியாழன்) கடைகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் – இன்று மாலை

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்