கனவு இல்லமும் ஒரு நூலகமும்

வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பெரிய பிரச்சினையாக இருப்பது என் நூலகம்தான். என்னிடம் சுமாராக பத்தாயிரம் நூல்கள் உள்ளன. இதில் கால்வாசி புத்தகங்கள் உலகில் ஓரிரண்டு இடங்களில்தான் கிடைக்கும். உதாரணமாக அந்தோனின் ஆர்த்தோவின் காதலி Colette Thomas. அவருடைய சுயசரிதை The Testament of the Dead Daughter. அந்தப் புத்தகம் லண்டன் நூலகத்தில்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எங்குமே இல்லை. பாரிஸின் உலகப் புகழ் பெற்ற நூலகமான பொம்ப்பிதூவிலும் இல்லை. அமெரிக்காவிலும் இல்லை. அதைப் பதிப்பித்த … Read more

26. மார்க்கி தெ ஸாத்: உடலும் ஆன்மாவும்…

”அராஜகமானது, காலரா போல் தொற்றிக்கொள்ளக் கூடியது, கோபப்படுத்தக் கூடியது, அதன் எல்லா அம்சங்களிலும் தீவிரத்தன்மை கொண்டது, இதுவரை ஒருபோதும் பார்த்திராத  அளவுக்கு உடல் இன்பத்தைக் கொண்டாடும் கற்பனைகளைக் கொண்டது, வெறித்தனமான கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசுவது – சுருக்கமாகச் சொன்னால் இதுதான் என் எழுத்து.  இதற்காக நீங்கள் என்னைத் திரும்பவும் கொல்லலாம்.  அல்லது, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.  ஏனென்றால், நீங்கள் என்ன செய்தாலும் நான் என்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.” சமூகம் அவரைக் கொல்ல … Read more

நன்றி

இன்றோடு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்ற இந்தத் தொடரை ஆரம்பித்து ஒரு மாதம் முடிகிறது. ஜூலை இருபதாம் தேதி ஆரம்பித்தேன். அநேகமாக தினமும் ஒரு கட்டுரை. சில தினங்களில் இரண்டு மூன்று கட்டுரைகள். இன்றோடு முடியும் என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்னும் கால்வாசி பாக்கியிருக்கிறது. இன்னும் மார்க்கி தெ ஸாத் முடியவில்லை. க.நா.சு.வின் அசுரகணத்தை எடுக்கவில்லை. அநேகமாக இன்னும் ஒரு மாதம் போகும் போல் இருக்கிறது. இந்தத் தொடருக்கு நீங்கள் கொடுத்த தார்மீக ஆதரவுக்கும் சந்தா, நன்கொடை என்று … Read more

அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன? – 2

ஒரு வாரத்துக்கு முன்புதான் அவந்திகா என்னிடம் ஒரு முக்கிய சமாச்சாரத்துக்காக சூடம் வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டாள்.       வீடு மாற்றி, புது வீட்டுக்குப் போய் அங்கே எல்லா பொருட்களையும் அந்தந்த இடங்களில் வைத்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வரை நீ ஒரு கூட்டத்துக்கும், ஒரு ஊருக்கும் போகக் கூடாது.  நானுமே அப்படித்தான் முடிவு எடுத்திருந்ததால் உடனடியாக சத்தியம் கொடுத்தேன்.  சத்தியம் கொடுத்த மறுநாள்தான் அந்திமழை இளங்கோவனின் அகால மரணச் செய்தி வந்தது.  அந்திமழை அசோகன்தான் செய்தி … Read more

அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன?

என் மைத்துனர் – அவந்திகாவின் தமையன் – தன் இரண்டு தங்கைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.  அவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார்.  மைத்துனர் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் ஒரே மகளை வளர்த்தார்.  இப்போது அவர் வயது அறுபத்தைந்து.  அறுபது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போல் ஓடியாடிக்கொண்டிருப்பார்.  மது, மாது, சூது, புகை என்று எந்தப் பழக்கமும் இல்லை.  வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு.  இதுதான் அவர் வாழ்க்கை.  நண்பர்களுடன் … Read more

கடவுளிடம் கேட்க எதுவுமில்லை…

ஒருவழியாக வீடு கிடைத்து விட்டது.  அடையார் காந்தி நகர்.  அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில்.  நான் இப்போது கோவிலுக்குச் செல்வதில்லை.  அந்த நேரத்தில் கூட எழுதலாம் என்ற ஒரே காரணம்தான்.  கோவிலுக்கு எதற்காகச் செல்கிறோம்?  இறை சக்தியிடம் வேண்டிக் கொள்வதற்காக.  பிரார்த்தனை செய்து கொள்வதற்காக.  எனக்குத்தான் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லையே?  ம்ஹும்.  எனக்கு புக்கர் பரிசு வேண்டும்தான்.  அதுகூட எதற்கு என்றால் என் எழுத்து ஆங்கில இலக்கிய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான்.  … Read more