வாசகர் வட்ட சந்திப்பு (2)

ஜூன் 6 மாலை ஆறரை மணிக்கு ஸூமில் வாசகர் வட்டச் சந்திப்பு நடக்க உள்ளது, வருகிறீர்களா என்று கேட்டிருந்தேன். எனக்கு முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் – இதுவரை ஒரு முறை கூட கடிதத் தொடர்பு இல்லாதவர்களைச் சொல்கிறேன் – கலந்து கொள்ளவா என்று கேட்கிறார்கள். அப்படி ஒருவரை “உங்களை எனக்குத் தெரியாதே?” என்று பதில் எழுதினேன். உடனே அவர், முன்பு ஒரு கடிதம் உங்களைத் திட்டி எழுதியிருந்தேனே என்று எழுதியிருக்கிறார். இப்படி இருக்கிறது உலகம். என் வாசகர் … Read more

அ-காலம் தொடர் பற்றி: அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

Ghada Al-Saman பற்றியோ Mikhael Naimy பற்றியோ இங்கு லெபனானில் யாருக்கும் எதுவும் தெரியாது. மியா கலிபா, நான்சி அஜ்ரம் (பாடகர்கள்) என்றால் கட்டுக்கட்டாகப் பேசுவார்கள். எழுத்தாளர்களின் நிலை இங்கும் அப்படித்தான். பெய்ரூட் நைட்மெயார் என்றால் கூகுள் செய்துதான் லெபனியர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இங்கு இலக்கியத்தின் நிலை இதுதான். சாரு லெபனான் வந்தபோது இந்த ஊர் எழுத்தாளர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ஒவ்வொரு லெபனிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போதும் அவருடைய கண்கள் மின்னும். அவ்வளவு ஈடுபாட்டோடு … Read more

வாசகர் வட்ட சந்திப்பு (1)

வருகின்ற ஆறாம் தேதி (ஜூன் 6) மாலை ஆறரை மணிக்கு நம்முடைய வாசகர் வட்டச் சந்திப்பு வைக்க முடிவு செய்திருக்கிறேன். வர விரும்பும் வாசகர்கள் எனக்கு எழுதவும். ஓரளவு ட்ரஸ் கோட் பின்பற்றினால் நலம். பப்புக்குப் போகும்போது லுங்கியோடு செல்வதில்லை அல்லவா? அந்த மாதிரி ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட். அவ்வளவுதான். ஆண்கள் மற்றும் பெண்கள் முண்டா பனியனைத் தவிர்க்கவும். மற்றபடி காலர் வைத்த சட்டையெல்லாம் தேவையில்லை. பேசும் போது சுய அறிமுகம் என்று பெரிய சொற்பொழிவு செய்யாதீர்கள். … Read more

சந்திப்பு

நான் யாரைப் பற்றியும் அஞ்சலிக் குறிப்புகளோ பிறந்த நாள் குறிப்புகளோ எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  காரணம், அவர்களைப் பற்றி எனக்கு மிகுந்த கசப்புணர்வுகளே இருக்கின்றன.  உதாரணமாக, எனக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்பதைப் போல நல்ல பொழுதுபோக்கு என்ற முறையில் சுஜாதாவின் எழுத்து பிடிக்கும்.  தினந்தோறும் அவர் வீட்டைத் தாண்டித்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போவேன்.  அவ்வப்போது கடற்கரையிலும் பார்ப்பேன்.  கண்ணுக்குக் கண் பார்த்து விட்டால் ஒரு சிறிய புன்சிரிப்போடு சரி.  அநேகமாக அவரைச் சுற்றிக் … Read more

அ-காலம் பற்றி பிச்சைக்காரன்

அன்புள்ள சாரு, உங்களது சமீபத்திய கட்டுரை ஒன்றில் “ஆய்த எழுத்துவில்” என எழுதியிருப்பீர்கள். வெகுநேரம் வார்த்தை பிரயோகத்தின் நேர்த்தியில் தோய்ந்து கிடந்தேன். படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஆயுத எழுத்தில் என தவறாக எழுதுவோர் அதிகம். அ−காலம் தொடரில் உங்களது தங்கமான தமிழ் நடையும் அற்புதமான தமிழும் தொழில் நுட்ப யுகத்துக்கு இறைசக்தியால் வழங்கப்பட்ட கொடை சாரு என நினைக்க வைக்கிறது ( தமிழில் கவனம் தேவை என இடையறாது கடிந்தும் இதமாகவும் சொல்லி வருகிறீர்கள். அதை சிரத்தையுடன் … Read more