நேற்று நடந்த ஒரு அதிசயம்…

நேற்று நடந்த அதிசயத்துக்குக் காரணம் வினித் தான்.  அவர் இல்லாதிருந்தால் அந்த அதிசயம் என் வாழ்வில் நடந்திராது.  விரிவாகச் சொல்ல வேண்டும்.  ஏற்கனவே நான் சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தும் ஒரே ஒரு படத்துக்குத்தான் போக முடிந்தது, புத்தகப் பிழை திருத்தம் வேலையின் காரணமாக அதற்கு மேல் திரைப்பட விழாவுக்குப் போக முடியாத வருத்த்த்தில் இருந்தேன்.  அந்த நேரத்தில் மியூசிக் அகாடமியில் நடக்கும் அபிஷேக் ரகுராம் கச்சேரிக்கு வருகிறீர்களா என்று கேட்டார் வினித்.  … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (2)

காயத்ரி சொன்ன இன்னொரு கருத்தையும் மறுக்க வேண்டியிருக்கிறது. தமிழில் ஒன்பது கோடி மக்கள் தொகைக்கு ஆயிரம் பேர் தீவிர இலக்கியம் படிக்கிறார்கள் என்றால், இதே விகிதாச்சாரம்தான் ஓர்ஹான் பாமுக்குக்கும் இருக்கும் என்பது காயத்ரி சொன்னது. இதை வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள். தருண் தேஜ்பாலும் ஒருமுறை இதையே சொன்னார். உலக ஜனத்தொகை 800 கோடியில் நூறு கோடி ஆங்கிலம் பேசுகிறார்கள். அதில் ஒரு லட்சம் பேருக்கு ஓர்ஹான் பாமுக்கைத் தெரியுமா? ஆச்சரியகரமாக கணக்கு ஒத்துப் போகிறது. எந்நூறு கோடியில் … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல்

தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்ற கருத்தை வைத்து சுமாராக ஐநூறு புலம்பல் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அந்தப் புலம்பல் கட்டுரைகளாலேயே நண்பர்களிடமிருந்து நிறைய திட்டும் வாங்கியிருக்கிறேன்.  ஒரு நண்பர் பிரிந்தே போய்விட்டார்.  இனிமேல் அப்படி எழுத மாட்டேன்.  காலம் மாறி விட்டது.  எல்லா எழுத்தாளர்களையும் அந்தந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள்.  சமீபத்தில் எனக்கு ரகுபதி என்ற வாசகர் அறிமுகம் ஆனார்.  இருபது ஆண்டுகளாக தீவிர இலக்கிய வாசகர்.  அவர் மனைவி தேவிகாவுக்கு இப்போதுதான் என் எழுத்து … Read more

முதல்முறையாக…

முதல்முறையாகக் குழம்புகிறேன். நான்கு பேர் – சீனி, வினித், மற்றும் இரண்டு நண்பர்கள் – உல்லாசம், உல்லாசம்… நாவல் தேறாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது, ஒரு பிரமாதமான கதைக்களன் கொண்ட நாவலை நான் பலஹீனமாக எழுதி வீணடித்து விட்டேன். சம்பவங்கள் யாரையும் சரியானபடி போய்ச் சேரவில்லை. சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. ஆனால், நாவலைப் படித்த வேறு சில நண்பர்கள் இது பெட்டியோவைவிட கனமான நாவல் என்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம் பயின்றவர்கள். ஒருவர் எனக்குப் பிடித்த … Read more

பெட்டியோ – என்.எஃப்.டி. & அச்சுப் புத்தகம்: ஒரு விளக்கம்

பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். … Read more