சொல் கடிகை – இரண்டாம் பாகம் – 1.குயவீதி

சொந்த ஊர் பற்றியோ, சொந்த மொழி பற்றியோ, குடும்பம் பற்றியோ, இளமை மற்றும் கடந்த காலம் பற்றியோ எனக்கு எந்தவித நாஸ்டால்ஜிக் உணர்வும் கிடையாது.  நான் வளர்ந்த நாகூர் கொசத்தெருவைப் பார்க்கும்போது மட்டும் ஒரு ஆச்சரிய உணர்வு உண்டாகும்.  (இந்தக் குப்பைக் காட்டிலிருந்தா வந்தோம்?)  தில்லி மீது ஒரு ஏக்கம் உண்டு.  ஆனால் 1980களின் தில்லி இப்போது இல்லை.  கடந்த நானூறு ஐநூறு ஆண்டுகளாக ஒரே மாதிரி இருந்த தில்லியை மெட்ரோ என்ற ரயில் பாதை மெட்ரோபாலிடன் … Read more

பெட்டியோ – இரண்டாவது பிரதி

பெட்டியோ இரண்டாவது பிரதி விற்பனைக்கு வந்துள்ளது. விலை என்.எஃப்.டி.யில் தற்போதைய விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். இது பற்றி என்.எஃப்.டி.யில் கருத்து சொல்லியிருக்கும் கண்ணாயிரங்கள் என்னுடைய பேராசை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக ஓசியில் எழுதிக் கொண்டிருந்தவன் நான். பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்து நாலு கட்டுரை எழுதினேன். தி இந்துவில். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் என்று நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது ஓசி என்றுதானே கணக்கு? அதை … Read more

பெட்டியோ… என்.எஃப்.டி.யில்

பெட்டியோ நாவலின் சில பிரதிகளை அந்நாவலை வடிவமைத்த ஸ்ரீபத் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அச்சுப் பிரதிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அச்சுப் பிரதியில் ஒரே ஒரு பிரதியைத் தயார் பண்ணி விட்டு அச்சுக்குக் கொடுத்தால் எத்தனை ஆயிரம் பிரதி வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். என்.எஃப்.டி. பிரதிகள் அப்படி இல்லை. ஒன்று ஒன்றாக செதுக்க வேண்டும். இப்போது விலை விவரம்: முதல் பிரதி – இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை … Read more

தினமும் பத்து மணி நேரம்

ஹாய் சாரு, நான் உங்கள் ப்ளாகைத் தொடர்ந்து வாசிப்பவன்.  சமீபத்தில் நீங்கள் இளைஞர்களின் பணி நேரம் பற்றிய நாராயண மூர்த்தியின் கருத்து பற்றி விமர்சித்திருந்தீர்கள்.  உங்கள் கட்டுரைகளில் நீங்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் படிக்கவும் எழுதவும் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள்.  இந்த எழுபது வயதிலும் உங்களால் அது சாத்தியப்படுகின்ற போது மற்றவர்களால் ஏன் தினமும் பத்து மணி நேரம் உழைக்க முடியாது?  நம்மிடம் passion இருந்தால் அது சாத்தியம்தானே?  அகஸ்திய ராஜ் டியர் அகஸ்திய ராஜ், … Read more

சித்த பிரமை

திருப்பூர் என்று நினைக்கிறேன். ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கே என் வாசகர் ஒருவர் தன் குடும்பத்தோடு என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வாசகர், அவர் மனைவி, அவர்களின் பதின்மூன்று வயது மகள். வாசகருக்கும் அவர் மனைவிக்குமான உடல்நலப் பிரச்சினைகளைக் கூறி மருந்து பெற்றிருக்கிறார். மகளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் பாஸ்கரன் குழந்தையின் நாடியையும் பார்த்து விடுகிறேனே என்று சொல்லி சிறுமியின் நாடி பார்க்கிறார். பார்த்தால் சிறுமிக்கு சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் … Read more