பெட்டியோ… என்.எஃப்.டி.யில்

பெட்டியோ நாவலின் சில பிரதிகளை அந்நாவலை வடிவமைத்த ஸ்ரீபத் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அச்சுப் பிரதிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அச்சுப் பிரதியில் ஒரே ஒரு பிரதியைத் தயார் பண்ணி விட்டு அச்சுக்குக் கொடுத்தால் எத்தனை ஆயிரம் பிரதி வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். என்.எஃப்.டி. பிரதிகள் அப்படி இல்லை. ஒன்று ஒன்றாக செதுக்க வேண்டும்.

ஓவியம்: ரோஹிணி மணி

இப்போது விலை விவரம்:

முதல் பிரதி – இரண்டு லட்சம் ரூபாய்.

இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை – ஒரு லட்சம் ரூபாய்.

நூறாவது பிரதி: ஐந்து லட்சம் ரூபாய்.

நூறாவது பிரதிக்கு மட்டும் யு.ஆர்.எல். வந்துள்ளது. மற்றவற்றிற்கும் இன்று இரவு வந்து விடும். நூறாவது பிரதி யு.ஆர்.எல்.

https://tinyurl.com/petiyo100thCopy

இன்றைய மதிப்பில் நூறாவது பிரதி சுமார் ஆறு லட்சமாக ஏறியிருக்கிறது. ($7,159.00) சந்தை மதிப்புக்கு ஏற்ப இந்த விலை கூடும், குறையும்.

நீங்கள் தரும் பணம் என் தென்னமெரிக்கப் பயணத்துக்கானது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

ஒருசில நண்பர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கான பிரதியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கும் இதை நினைவூட்டுகிறேன்.

தொடர்புக்கு: வினித் : தொலைபேசி எண்: 84384 81241

என்னைத் தொடர்பு கொள்ள: charu.nivedita.india@gmail.com