ஒரு கலைஞனின் வருகை…

  (பின்வருவது ஜி. கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதிக்கு (எதிர் வெளியீடு) அடியேன் எழுதிய முன்னுரை.  நூல் வெளியீட்டு விழா மார்ச் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது.)   லௌகீக வாழ்வில் எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது;  ஆனால் இலக்கிய வாழ்வில் உண்டு.  அதில் முக்கியமான ஒன்று, கீழ்வரும் பட்டியலில் அடங்குபவர்கள் யாராலும் நல்ல, காத்திரமான இலக்கியம் படைக்க முடியாது.  யார் அவர்கள் … Read more

ஒரு அதிர்ச்சியும் ஒரு அறிவிப்பும்…

http://www.jeyamohan.in/84691 இந்தப் பதிவில் ஜெயமோகன் முதலில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ‘புகைப்படங்கள்: நன்றி பிரபு காளிதாஸ்’ என்று போடவில்லை. அதற்கு பிரபு காளிதாஸ் கீழே உள்ளதை தன் முகநூலில் எழுதினார். ***   பிரபு காளிதாஸ், முகநூல், 16.2.16 என் பெயரில் ஒரு Photo courtesy credits கூட இல்ல பாத்தீங்களா….? தட் இஸ் ஜெயமோகன்…Attitude matters….புகைப்படங்கள் ஒருபோதும் வானிலிருந்து தேவன் வந்து எடுப்பதில்லை. நான் புகைப்படங்கள் எடுத்து Photo documentation செய்வது உயிர்மை … Read more

புத்தக வெளியீட்டு விழா – காணொளி

காலையில் எழுதிய போது மறந்து போனேன்.  எஸ். ராமகிருஷ்ணனும் விழாவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.  அநேகமாக இந்த விழாவில் எங்கள் மூவரையும் படம் பிடித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம்.  விழா பற்றிய என்னுடைய சிறியதொரு உரை இந்தக் காணொளியில் உள்ளது.  நன்றி: ஷ்ருதி டிவி நண்பருக்கு…

ஃபெப்ருவரி 27: புத்தக வெளியீட்டு விழா – 2

புத்தக வெளியீட்டு விழா அரங்கத்துக்கு 52000 ரூபாய் ஆனது.  நான் வெளிநாடு செல்வதற்காகக் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த குருவித் தொகையிலிருந்து எடுத்து கொடுத்து விட்டேன்.  ஒரு நண்பர் வெளியீட்டு விழாவுக்காக 20000 ரூ அனுப்பியிருந்தார்.  அதில் 15000 ரூபாயை எடுத்து சொந்த செலவு செய்து விட்டேன்.  அதாவது, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் 15000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டேன்.  எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க ஆறேழு நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் மூலம் அந்த நூல்களை … Read more

ஃபெப்ருவரி 27 : புத்தக வெளியீட்டு விழா – 1

நல்ல சகுனம்.  காலை ஏழரை மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ப்ரமோ ஷூட்.  அதனால் வழக்கமான நடைப்பயிற்சி உடையணிகளை விடுத்து கனவானாக முயற்சிக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு போனேன்.  ஷ்ருதி டிவி நண்பர் தான் வர முடியாதது பற்றி ஸ்ரீராமுக்கு காலை ஐந்தரை மணிக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.  அதை ஸ்ரீராம் பார்த்த போது மணி ஏழரை.  வடசென்னையிலிருந்து ஸ்ரீராமும், மேற்கு அண்ணா நகரிலிருந்து முத்துக்குமாரும் நானும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சந்தித்தது வீணாகி விட்டது.  ஷ்ருதி டிவி … Read more

தேர்தல் கணிப்பு

அன்புள்ள சாரு, தங்கள் தேர்தல் கணிப்பின் ரசிகன் நான். இம்முனற எப்படி இருக்கும்? ஆவலுடன் வினோத்   அன்புள்ள வினோத் ஒவ்வொரு தேர்தலிலும் மிகத் துல்லியமாக முடிவுகளைச் சொல்லி விடும் எனக்கே இந்த முறை விழி பிதுங்குகிறது.  சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு படம் சொதப்புவதைப் போல் அதிமுகவின் கடந்த ஒரு ஆண்டு ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் அதிமுகவின் மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு இல்லை.  சென்னை, கடலூர் மட்டும் விதிவிலக்கு.  இன்னொரு மிக முக்கியமான, ஆச்சரியமான … Read more