சாரு நிவேதிதாவின் தற்கொலை – ஒரு குறுங்கதை

(முன்குறிப்பு: இந்தச் சிறுகதை வீடு நாவலில் இடம் பெறும். இந்தச் சிறுகதையில் இலக்கணப் பிழை நிலவ வாய்ப்பு இருக்கிறது. காரணம், இந்தக் கதை இன்று அதிகாலையில் எனக்கு ஒரு கொடுங்கனாவாக வந்தது. கனவில் தர்க்கம் இருக்காதுதானே?) மாண்புமிகு முதல்வர் அவர்கள் செக்ரடேரியட்டில் தன் பணிகளை முடித்து விட்டு காரில் ஏறும் தருணத்தில் அதுவரை எங்கோ பதுங்கியிருந்த சாரு நிவேதிதா பெட்ரோலைத் தன் மீது ஊற்றி எரியூட்டிக் கொள்கிறான். யாராலும் தடுக்க முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து … Read more

அழையா விருந்தாளி – 2

மீண்டும் அழையா விருந்தாளி நண்பர் எனக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். எழுதாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் எழுதுகிறார். அப்படியென்றால், அதை நான் மிகக் கடுமையான அத்துமீறல் என்றே சொல்வேன். இவருடைய மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகள் அத்தனை பேருக்காகவும் நான் இப்போது பரிதாபப்படுகிறேன். நான் யார் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகும் நீங்கள் எனக்கு அட்வைஸ் மயிராகவே உதிர்த்துக்கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? திமிர் என்றுதானே அர்த்தம்? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? … Read more

ஒரு பஞ்சாயத்து

இப்போதெல்லாம் அராத்துவோடு எடுத்ததற்கெல்லாம் பஞ்சாயத்தாகப் போய் விடுகிறது. எல்லாம் வீடு என்ற நாவலில் எழுதலாம் என்று இருந்தால் இப்போதே பஞ்சாயத்தை ஆரம்பித்து வைக்கிறார் அராத்து. அவர் எழுதியிருப்பதை கீழே தருகிறேன். இலக்கிய வீடு – அராத்து சாரு , மனுஷ் , போகன் என இலக்கிய உலகமே வீடு தேடிக்கொண்டு இருக்கிறது. இந்த அல்ப லௌகீக பிரச்சனையை வைத்து கதை , கவிதை , கட்டுரை என எழுதி இலக்கியமாக்க கள்ள முயற்சி நடப்பதாகச் சந்தேகம் எழுவதை … Read more

அழையா விருந்தாளி

அழையா விருந்தாளி என்று ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. A dirty story என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கிடைக்கும். அந்தக் கதையையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. கதையில் ஒரு நல்லவர் வருகிறார். அந்த நல்லவரால் ஒரு குடும்பமே சிதைந்த கதைதான் அழையா விருந்தாளி. அந்த மாதிரி ஒரு நல்லவர் எனக்குப் பின்வருமாறு ஒரு அட்வைஸ் சொல்லியிருக்கிறார். I see that you are contemplating change of residence.I live in a senior citizen … Read more

கோவாவில் ஒரு வீடு

பெங்களூர் சென்றிருந்ததால் நம் தொடரைத் தொடர முடியவில்லை.  இப்படி ஒரு இடைவெளி வரும் என்று தெரிந்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதைப் பதிவேற்றம் செய்யும்போது கட்டுரை கணினித் திரையிலிருந்து காணாமல் போய் விட்டது.  அதைத் திரும்பவும் நாளை உட்கார்ந்து எழுத வேண்டும்.  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நான் இனிமேல் மாதத்தில் ஐந்து நாள்கள் கோவாவில் இருப்பேன்.  பெங்களூருக்கு பதிலாக கோவா.  அதன் பொருட்டு கோவாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்.  … Read more

24. போர்னோவும் கலையும் (தொடர்ச்சி)

“எனது படங்களின் நோக்கம், பெண்களின் பாலியலைக் காண்பிப்பது அல்ல; அதை ஆய்வு செய்வதே.”                                                                                     – காத்ரீன் ப்ரேயா காத்ரீனின் இருபத்தைந்து ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் (2004இல் எழுதப்பட்ட கட்டுரை இது) அவரது ஆறாவது படம் ரொமான்ஸ்.  ரொமான்ஸை மிகச் சுருக்கமாக ‘ஒரு பெண் பாலியலை சுயவதையின் (masochistic) மூலமாக அணுகுவது’ என்று சொல்லலாம். இப்படத்தின் முன்னோடியாக Nagisa Oshimaவின்  In the Realm of Senses (1976) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார் காத்ரீன்.  … Read more