கோவாவில் ஒரு வீடு

பெங்களூர் சென்றிருந்ததால் நம் தொடரைத் தொடர முடியவில்லை.  இப்படி ஒரு இடைவெளி வரும் என்று தெரிந்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதைப் பதிவேற்றம் செய்யும்போது கட்டுரை கணினித் திரையிலிருந்து காணாமல் போய் விட்டது.  அதைத் திரும்பவும் நாளை உட்கார்ந்து எழுத வேண்டும். 

அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நான் இனிமேல் மாதத்தில் ஐந்து நாள்கள் கோவாவில் இருப்பேன்.  பெங்களூருக்கு பதிலாக கோவா.  அதன் பொருட்டு கோவாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.  பத்து பேர் வேண்டும்.  இதுவரை ஐந்து பேர் சேர்ந்திருக்கிறார்கள். 

திட்டம் இதுதான்.  மாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.  பத்து பேர் ஐம்பதாயிரம்.  முப்பதாயிரம் வாடகை.  இருபதாயிரம் வீட்டுப் பராமரிப்பு மற்றும் பணியாள் ஊதியம்.  நீங்கள் உங்கள் நண்பர்களோடு அந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம்.  அல்லது, நான் வரும்போது என்னோடும் வந்து தங்கலாம். 

இது போல் பல பிரசித்தமான கிளப்புகள் உண்டு.  அதற்கு வருடத்துக்கு இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று கட்டணம்.  இத்தனை பணம் கொடுத்து அதில் சேர்பவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கூட அங்கே போய் தங்க மாட்டார்கள்.  வீட்டில் வாங்கிப் போடும் நடை எந்திரத்தில் ப்ரா, ஜட்டிகள் எல்லாம் காயப்போடுவார்கள் இல்லையா, அந்த மாதிரி.  நூறு பேர் வாங்கினால் ஒருத்தர்தான் நடை எந்திரத்தைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.  மற்றபடி அந்த எந்திரத்தில் மேற்கண்ட ஐட்டங்கள்தான் தொங்கும். 

ஆனால் கோவா வீடு அப்படி அல்ல.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் போய்த் தங்கலாம். மாத வாடகை உங்கள் பங்காக ஐந்தாயிரம். 

முக்கியமான விஷயம், பணத்தட்டுப்பாடு உள்ளவர்கள் இதில் சேராதீர்கள். 

இன்னொரு முக்கியமான விஷயம், இத்திட்டத்தில் சேர ஆர்வம் உள்ளவர்களை அடுத்த மாதம் ஊட்டியில் சந்தித்துப் பேசுவேன். அதில் தேர்வானால்தான் கோவா.

உதாரணமாக, குடித்து விட்டு வாந்தி எடுப்பவர்கள், குடித்து விட்டு உளறுபவர்கள், குடிக்காமலேயே உளறுபவர்கள், சிகரெட் புகைத்து விட்டு சிகரெட் துண்டை அப்படி அப்படியே போடுபவர்கள் போன்ற மகாத்மாக்களுக்கு இடம் கிடையாது.  அதைப் பரிசோதிப்பதற்குத்தான் ஊட்டி சந்திப்பு.  இன்னும் சில பிரிவினருக்கும் இடம் கிடையாது.  அடுத்தவருக்கு புத்திமதி சொல்பவர்கள்.  சபையில் பெண்கள் இருந்தால் அவர்களை மட்டம் தட்டிப் பேசுபவர்கள்.  இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.  என் நண்பர்களில் ஒருவரைப் பற்றி என் தோழி சொன்னாள், He treats me as a whore.  வார்த்தை கூட வேண்டாம், வெறும் பார்வையாலேயே ஒரு பெண்ணை அப்படி ஒரு ஆசாமி நினைக்க வைக்க முடியும்.  அப்படிப்பட்ட மகாத்மாக்களும் நம்மிடையே உண்டு.  ஒருமுறை என் தோழியோடு டென் டௌனிங் பப்புக்குச் சென்றிருந்தபோது எனக்குத் தெரியாமல் அவளிடம் அவளுடைய தொலைபேசி எண்ணைக் கேட்ட என் நண்பனை நான் என்ன செய்தேன் என்று ஒரு கதையில் எழுதியிருக்கிறேன்.  அப்படிப்பட்டவர்கள் வேண்டாம் என்பதற்காக இதை எழுதுகிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

சந்தா விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai