12. ரஸியா, ஹோ ந ஜானா ரே…

ராகம் மாரு பிஹக்.  ரஸியா, ஹோ ந ஜானா ரே என்ற இந்தப் பாடலை பலரும் பாடியிருக்கிறார்கள்.  அதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது வெங்கடேஷ் குமார்.  இன்றைய ஹிந்துஸ்தானி இசையில் அவரையே நான் முதன்மை ஸ்தானத்தில் வைப்பேன்.  தினமும் காலை ஏழிலிருந்து எட்டு எனக்கு நடை நேரம்.  இன்று அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு யாரும் கிடைக்காததால் வெங்கடேஷ் குமாரின் ரஸியாவைக் கேட்டேன்.  ஹர்ஷ் போரஸ் படேல் இயற்றியது.  இவர் யார் என்று என்னால் கண்டு பிடிக்க … Read more

11. பின்நவீனத்துவ சரஸ்வதி

நீங்கள் பெட்டியோ நாவலைப் படித்திருக்கிறீர்களா இல்லையா எனத் தெரியாது. அதன் பக்கங்களை நான் கனவிலிருந்தே எழுதினேன். ஸீரோ டிகிரியைப் போல. அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். ஆம், அப்படி ஒரு துய்ப்பை என் வாழ்நாளில் அடைய முடியுமெனத் தோன்றவில்லை.  தமாலியுடனான சரீர சேர்க்கை அப்படித்தான் இருந்தது. மரணம் எப்பேர்ப்பட்ட ருசியுடையதென்று தெரியுமா உனக்கு?  அதை ருசித்தால் நாம் இல்லாமல் ஆகி விடுகிறோம்.  சரீர சேர்க்கை என்பது மரணத்தைத் தொட்டுத் தொட்டு ஓடி வரும் நாடகம்.  ஆனால் … Read more

10. Hand of God

ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ராம்ஜி, காயத்ரி, நான் மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது போகிற போக்கில் என்று சொல்வோமே அம்மாதிரி த்வனியில் “உடனே லா.ச.ரா.வை மொழிபெயர்த்து விடுவோம்” என்றாள் காயத்ரி.  ஆங்கில மொழிபெயர்ப்பு.  அதைக் கேட்டவுடன் நான் ஏதோ சாமி வந்தது போல் ஒரு வெறியாட்டம் ஆடினேன்.  அந்த வெறியாட்டத்தின் சுருக்கம்: ”என்னது, லாசராவை மொழிபெயர்ப்பதா?  கடவுளின் வார்த்தைகளை அப்படி போகிற போக்கில் மொழிபெயர்த்து விட முடியுமா?  லாசராவை மொழிபெயர்க்க ஒருத்தன் இந்த உலகில் பிறந்திருக்கிறானா?” குரூரத்தின் அழகியலை … Read more

9. ஒரு குருக்களின் கதை

ஆண்டன் செகாவ் பற்றி, தஸ்தயேவ்ஸ்கி பற்றி, மாப்பஸான் பற்றி, ப்யூகோவ்ஸ்கி பற்றி, மற்றும் பல மேற்கத்திய இலக்கிய மேதைகள் பற்றியெல்லாம் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ரோமாஞ்சனம் பெருகப் பேசும்போதெல்லாம் எனக்கு அசூயையாக இருக்கும்,   நம்மிடையே இருக்கும் மாமேதகள் பற்றி யார் ஐயா பேசுவது என்று.  பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மாமேதைகள் மீது மூத்திரமும் அடித்தால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  அதிலும் என் மாணவரே அப்படிச் செய்யும்போது மனம் பதறுகிறது.  இது அராத்து: “லா.ச.ரா வின் அபிதா … Read more

8. இலக்கியம் என்ன செய்கிறது?

நேற்று (26.4.2024) கிட்டத்தட்ட நாள் பூராவும் நானும் அவந்திகாவும் தென் சென்னை முழுக்கவும் வீடு தேடி அலைந்தோம். நண்பர்களிடம் சொல்லியிருந்தால் கார் அனுப்பியிருப்பார்கள். எப்போது கிளம்புவோம் என்று தெரியாததால் கார் வேண்டாம், ஆட்டோவிலேயே போகலாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. வீட்டில் கார்த்திக்கின் கார் இருக்கிறது, டிரைவர் இருந்தால் அதில் போயிருக்கலாம். பகுதி நேர டிரைவர் கிடைத்தாலும் என்னால் பெட்ரோல் போட்டு மாளாது என்பதால் அது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஆட்டோவிலேயே நாள் பூராவும் சுற்றினோம். வீட்டுக்குத் … Read more

7. Pieta: குரூரத்தின் அழகியல்

“இன்று 26.7.2024) அபிதாவையும் அசுரகணத்தையும் படித்து விட்டு நாளை சந்திக்கிறேன்.  அநேகமாக நேற்றைய ஆட்டத்தை விட ரௌத்ரமாக இருக்கும்.”  நேற்று நான் இப்படி எழுதியிருந்ததற்கு அராத்துவின் எதிர்வினை: ”என்ன சாரு, இப்படி எல்லாம் முன்முடிவோடு படிக்க இறங்கலாமா? இது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானது அல்லவா ? ரௌத்திரமான ஆட்டம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக் வேறு விடுகிறீர்கள். பயமாக இருக்கிறது.”    முன்முடிவோடு படிக்க இறங்குவது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானதுதான்.  ஆனால் நான் இங்கே முன்முடிவோடு … Read more