ஹிண்டூ இலக்கிய விழாவில் பேசியது
ஹிண்டூ இலக்கிய விழாவில் பேசியது.
ஹிண்டூ இலக்கிய விழாவில் பேசியது.
ஆங்கிலத்தில் நான் எழுதிய முதல் எழுத்து. இது கட்டுரை அல்ல. கதையும் அல்ல. சுயசரிதை. என் எழுத்தைத் தமிழில் பல காலமாகப் படித்து வந்திருக்கும் நண்பர்கள் இந்த முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்னிடம் ஒரே விதமான கருத்தைக் கூறினார்கள். என் எழுத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது அது என்னதான் அட்டகாசமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதில் நான் கம்மியாகவே தெரிகிறேனாம். ”சாருவின் அட்டகாசம், சாருவின் துள்ளல், சாருவின் கொண்டாட்டம், குசும்பு, நையாண்டி, எள்ளல் எல்லாமே அதில் காணாமல் போய் … Read more
கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன். இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, … Read more
ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நாளையும் (14 ஃபெப்) நாளை மறுநாளும் முப்பது சதவிகிதத் தள்ளுபடியின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களுக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1
சென்னையில் நடந்த ஹிந்து இலக்கிய விழா, கோழிக்கோடு இலக்கிய விழா, ஜெய்ப்பூர் இலக்கிய விழா, திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமி இலக்கிய விழா நான்கும் முடிந்து விட்டது. நாளை சென்னை வந்து விடுவேன். விழாக்கள் பற்றி சில தினங்களில் எழுதுகிறேன். என்னைப் பற்றிய ஆவணப்படம் தெ அவ்ட்ஸைடர் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. ஆனாலும் அதில் இரண்டு விஷயங்களைச் சேர்க்க வேண்டும். ஒன்று, சீலே. இரண்டு, பாரிஸ். அதன் பொருட்டு வரும் மார்ச் இறுதியில் நானும், நண்பர்கள் குமரேசன், … Read more
Conversations With Aurangzeb நாவலுக்கு டெலிக்ராஃப் இதழில் விமர்சனம் வெளியாகியுள்ளது. https://www.telegraphindia.com/culture/books/a-spirit-of-history-throughout-the-novel-conversations-with-aurangzeb-by-charu-nivedita-the-audience-keeps-changing-and-so-do-the-speakers/cid/1999302