இன்று வேண்டாம்…

எப்போதடா நாய்களுக்குப் பணிவிடை செய்யாத வாழ்க்கை லபிக்கும் என்று தினந்தோறும் வேண்டிக் கொள்கிறேன்.  ஒரு நாளில் நான்கு மணி நேரம் பப்பு ஸோரோவுக்கே போய் விடுகிறது.  ச்சிண்ட்டுவுக்கு நேரமே ஆவதில்லை.  பூனைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன.  நாய்கள்தான் எத்தனை வயது ஆனாலும் சிசுவைப் போல் நம் கவனிப்பை எதிர்பார்க்கின்றன.  மாதம் முடியும் போது 28 அல்லது 29-ஆம் தேதி பப்பு, ஸோரோவுக்குப் பூச்சிக் கொல்லி மாத்திரை கொடுக்கவில்லை என்றால், கொடுக்க மறந்து போனேன் என்றால், முதல் தேதியிலிருந்து … Read more

சர்வாதிகாரத்தை நோக்கி…

மறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம் மனுஷ்ய புத்திரன் சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம் இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘ என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற … Read more

Bigg Boss Finale பற்றி…

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை.  ஆனாலும் பிந்து மாதவிதான் வெளியேறி இருப்பார் என்று நினைக்கிறேன்.  எஞ்சி இருப்பவர்கள் சினேகன், ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ். இதில் வெல்லப் போவது சினேகன் என்று சினேகனே தீர்மானித்துவிட்டார்.  அது அவரது பேச்சிலும் நடை உடை பாவனைகளிலும் தெளிவாக தெரிகிறது. பிரச்சனையில்லை. இந்த நான்கு பேரில் ஐம்பது லட்சம் பரிசைப் பெறத் தகுதியானவர் யாரென்று பார்போம். கணேஷ் நூறு நாட்கள் இருந்தவர். போராடியவர்.  நல்லவர். ஆனால், பரிசை வெல்லத் தகுதியில்லாதவர் … Read more

யுவன் சந்திரசேகரின் சிறுகதை

நற்றிணை பதிப்பகம் யுகன் நற்றிணை பதிப்பகத்தின் சார்பில் நம் நற்றிணை என்று ஒரு அழகான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். சமீப காலமாய் நான் தமிழில் எதுவும் படிப்பதில்லை. (ரொம்பக் காலமாகவே அப்படித்தான் என்று தோன்றுகிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் படித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. முன்னோடிகள் அனைவரையும் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாயிற்று. அது போதும் என்று தோன்றுகிறது. உலக இலக்கியம்தான் இப்போதைக்குப் படிக்க ரசமாக … Read more