விவேகம் சர்ச்சை – Mumbai Mirror
Mumbai Mirror, 17.9.17 https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/cinemas-relentless-cyber-bullies/articleshow/60716511.cms
Mumbai Mirror, 17.9.17 https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/cinemas-relentless-cyber-bullies/articleshow/60716511.cms
வாஸ்தோவை எனக்கு ஒரு மாதமாகத்தான் தெரியும். என்னமாய் எழுதுகிறான். எப்பேர்ப்பட்ட பேரழகன். பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்திருப்பேன். இப்படி ஒரு அழகனை சமீபத்தில் கண்டதில்லை. அவனுடைய சமீபத்திய கவிதை இது: அலைபேசியதிலிருந்த பதற்றமில்லை அவளிடம் நிதானமாய் கதவைத் திறந்தாள் அவரெங்கே என்றேன் வணக்கம் என்று கை குவித்து அதைத் தன் வலக்கன்னம் வைத்து கையோடு தலைசாய்த்தாள் எட்டிப்பார்த்தேன் திறந்திருந்த படுக்கையறையின் கதவு அவர் மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டியது என் தோள் மிருதுவான ஸ்பரிசம் உணர திடுக்கிட்டுத் திரும்பினேன் … Read more
அபிலாஷ் என்னைப் பற்றி எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன். அதைப் பாராட்டி பல நண்பர்கள் எழுதியிருந்தனர். என் வாழ்வில் என்னை இத்தனைத் துல்லியமாக அவதானித்து யாரும் எழுதியதில்லை. என் எழுத்து பற்றி இவ்வளவு துல்லியமாக எழுதியவர் அராத்து. அபிலாஷ் ஒரு மனோதத்துவ நிபுணனைப் போல, ஒரு மந்திரவாதியைப் போல் என் மனசுக்குள் புகுந்து பார்த்து விட்டார். அடுத்து, கஸலின் கடிதம். இத்தனை துல்லியமாக நான் எழுதிய எல்லாவற்றையும் ஒரு ஆத்மா படித்திருக்கும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் … Read more
என் அன்புக்குரிய நண்பர் அபிலாஷ் என்னைப் பற்றியும் என் வாசக அன்பர்கள், நண்பர்கள் பற்றியும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். மனோதத்துவத்திலும் உளவு இயலிலும் ஆள் பலே கில்லாடி போல் தெரிகிறது. பக்கத்தில் இருந்து பார்த்தது போல் எழுதியிருக்கிறார். ஆனால் ஒன்றே ஒன்றுதான் தவறு. அபிலாஷ் உங்களைப் பாராட்டவில்லை, கிண்டல் செய்து திட்டியிருக்கிறார் என்று சொன்னால் (சொல்வார்கள்தான்) அதை நான் “அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையுடன் (பக்கத்தில் கேள்விக் குறி அல்ல; ஆச்சரியக் குறி) கடந்து விடுகிறேன். லேசர் … Read more
பிரபலங்கள் எல்லோருமே தங்களுக்குள் ஒரு குறுகிய உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உலகத்தைத் தவிர வேறு உலகப் பிரஜைகளால் அவர்களோடு உரையாடவோ தொடர்பு கொள்ளவோ முடியாது. மற்றும் அவர்கள் எல்லோருமே நார்ஸிஸிஸ்டுகளாகவும் (Narcissist) இருக்கிறார்கள். தாங்கள் சொல்வதே சரி; மறுப்பவனெல்லாம் எதிரி. நானும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டே வந்தவர் டபாரென்று நீங்களும் அப்படித்தான் என்று ஒரு குண்டைப் போட்டார். அடப் பாவி. நான் ஒரு நார்ஸிஸிஸ்ட் என்பது உண்மைதான். ஆனால் உலகத்தில் … Read more