அவதூருக்கு எதிர்வினை (2): ரிஷி
ரிஷி: எனக்கு இது வரைக்கும் புரியாத புதிர் என்னான்னா, இலக்கியம் படிச்சும் எரும மாடு மாதிரி எப்டி திரிய முடியும்ங்கிறதுதான்!! இப்டி கூச்ச நாச்சமே இல்லாம போஸ்ட் போட்றது, அந்த பக்கம் இணைய இதழ் நடத்திக்கிட்டு எலக்கியம் வேற!! இன்னும் எத்தன காலத்துக்குதா இப்டி அதர பழைய குற்றச்சாட்டப் போடுவீங்க சாருவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு!? இத கேட்டுக் கேட்டு புளிச்சு போச்சு. யார்ரா நீங்கலாம்!!!! எனக்கு ஒரு கேள்வி. சினிமாவுல நடக்காத தில்லாலங்கடி வேலையா? என்னோட … Read more
அவதூறுகளும் ஆன்மீகப் பயிற்சியும்…
அன்புள்ள சாரு, உங்களை அவதூறு செய்திருப்பவர் பெரிய இலக்கியவாதியோ பெரிய எழுத்தாளரோ கிடையாது. ஒரு இணைய இதழ் நடத்துகிறார். அதில் பெரும்பாலும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிறரால் செய்யப்பட்டு அதில் வருகிறது. இவர் எப்பொழுதும் தனது பேஸ்புக்கில் மற்றவர்களை சாடி மட்டுமே கிண்டலாக எழுதுவது வழக்கம். எப்பொழுதும் அவர் பார்ப்பனன் பார்ப்பனன் என்று எழுதிக் கொண்டே இருப்பதால் ஒருமுறை நான் கேள்வி கேட்டேன். (நான் பார்ப்பனன் கிடையாது). அதற்கு பதில் தராமல் நான் கமெண்ட் எழுத … Read more
அவதூறுக்கு ஒரு எதிர்வினை (1)
ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி நரசிம்மன்: ஒரு பதிப்பகத்தின் ஜீவனே எழுத்தாளன்தான். நாம் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டியது எந்த ஒரு பதிப்பகத்தின் கடமை என்று நினைக்கிறேன். மிஷ்கினிடம் வேலை பார்த்த அசோசியேட் டைரக்டர் அந்த கேரக்டர் சாருவை வைத்துதான் படத்தில் அமைத்தோம் என்று சொல்வதே பொய் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும், உங்களை நம்பி ஒரு வார்த்தை பேசியவரின் கருத்துக்களை இப்படி வெளியே பேசுவது அநாகரிகத்தின் … Read more
அவதூறு
அன்புள்ள கோகுல், “பிசாசு” படத்தில் வருகிற அந்த “ஹண்ட்ரட் பக்ஸ் இருக்குமா புரோ” பாத்திரத்தை நான் என்றுமே ரசித்ததில்லை. ஏன் தெரியுமா? அது சாருவை குறிப்பதால் அல்ல. நான் ஆரம்பத்தில் இருந்தே அது மிஷ்கின் தன்னிடம் ஓசியில் வாங்கிக் குடித்த அல்லது அவரை நம்பி அவரிடம் நட்பாகப் பழகின சிறுபத்திரிகையாளர்களையும்., இலக்கியவாதிகளையும் ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் நோக்கில் படைத்த ஒரு பகடிப் பாத்திரமாகவே கண்டேன். நீங்கள் இப்போது கமல் vs ரஜினி crossfireஇல் சாருவின் மீது சேற்றை வாரி … Read more