இவன் என்ன மனிதனா தெய்வமா, தயவு செய்து சொல்லுங்கள்…

என் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்தால் மெரினா கடற்கரை வரும்.  அங்கே ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து என் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்.  இந்த இசையை மிகுதியான சப்தத்தில் தான் கேட்க வேண்டும்.  ஆனால் என் மடிக் கணினி என்னைப் போலவே ஒரு நோஞ்சான்.  ஆனாலும் இவன் என்னைக் கொல்லுகிறான்.  இவன் மனிதனா, தெய்வமா… http://www.youtube.com/watch?v=GWtUvWO-Qv0 Dire Straits குழுவின் பிரதான பாடகன் இவன்…

madness and art…

பித்தநிலையைக் கலையாக மாறுவது பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் சட்டைப் பாக்கெட்டில் பதில்கள் வைத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளால் இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியாது.   stairway to heaven என்ற இந்தப் பாடலைக் கேளுங்கள்.  நான் பல ஆண்டுகளாக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  என் நாடி நரம்புகளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் இது.  நூறு மிகச் சிறந்த ராக் பாடல்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.  கிடாரில் ஒரு ரகளையே நடந்திருக்கும், கேளுங்கள்.  Led Zeppelin குழு. … Read more