Digimodernism – First Footprint (3)

III   இந்த நாவலைப் படித்த போது பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஞாபகத்துக்கு வந்தது. முழுக்கவும் போர்னோ மொழியில் 1928-இல் எழுதப்பட்ட நாவல் அது.  அந்த அளவுக்குத் தமிழில் போர்னோ மொழியில் எழுதுவதற்கு சுதந்திரம் இல்லை.  ஆனால் சம்பவங்களிலும், அதை விட முக்கியமாக discourse இலும் இந்த நாவல் கண்ணின் கதை நாவலின் தளத்திலும் நின்று விளையாடி விட்டு, அதையும் தாண்டிச் செல்கிறது. கண்ணின் கதையில் வரும் ஆணுக்கும், அவன் தோழி … Read more

Digimodernism – First footprint – 2

சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஐதீகம். இந்த நூலை கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது 500 அத்தியாயங்களாக சுருக்கி எழுதினார். இதை மேலும் சுருக்கி எழுதினார் பாப்ரவியர். இந்த நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூல்களைப் பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) குறிப்புகள் வருகின்றன. இன்னும் … Read more