எக்ஸைல்-2 பற்றி : அராத்து

இன்று ஒரு சந்தேகம் கேட்பதற்காக அராத்துவுக்கு எக்ஸைல்-2 நாவலின் எட்டாவது அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன்.  மிக நீண்ட அத்தியாயம் அது.  மாலைதான் அழைப்பார் என்று பார்த்தால் கொஞ்ச நேரத்தில் அழைத்தார்.  படிச்சிட்டீங்களா என்றால் ஓ படிச்சுட்டனே என்கிறார்.  எப்படி என்று அவரே வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.  பாருங்கள்: சாருவின் எக்ஸைல் 2 ஒரு அத்தியாயம் படித்தேன்.முழுக்க முழுக்க மரங்கள் மற்றும் பூக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.க்ளாஸிக் என கண்ணை திறந்து கொண்டே சொல்லிவிடலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் , … Read more

நானும் என் வாழ்க்கையும்… (3)

சிறிது நேரம் முன் ஒரு நண்பரிடம் பேசினேன்.  என்னைக் கன்னாபின்னா என்று திட்டி எழுதுகிறார்களாம்.  என் நண்பர்களையும் கன்னா பின்னா என்று திட்டுகிறார்களாம்.  ”நானும் அதேபோல் களத்தில் இறங்கி அவர்களைத் திட்டப் போகிறேன்” என்றார் நண்பர்.  எப்படி எப்படித் திட்டுவேன் என்றும் சொன்னார்.  நான் மிரண்டு போனேன்.  எலியோடு சண்டைக்குப் போய் நீங்கள் வெற்றியே அடைந்தாலும் நீங்களும் எலியாக மாறி விட்டீர்கள் என்றுதானே பொருள்? உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் … Read more