ஒரு குற்றச்சாட்டும் பதிலும்

சாரு நிவேதிதாவும் அரவிந்தன் நீலகண்டனும் பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் இந்து வெறி அமைப்புக் கூட்டத்தில் பேசப் போகிறார்களாம் ! மகிழ்ச்சி. இப்படியே எல்லாரும் பகிரங்கமா வாங்கப்பா. அப்பதான் விவாதம் ஆரோக்கியமா நேர்மையா இருக்கும். – ஞானி// மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு என் பதில்: அந்தக் கூட்டத்தில் என் பேச்சின் ஆரம்பமே, நான் ஒரு இந்து அல்ல என்பதுதான். மாதொரு பாகன் நாவல் ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்று (அதற்கு முன்னுரையில் பெ.மு. நன்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்) மேற்கத்திய/ கிறித்தவ … Read more

சினிமாவுக்கு ஏன் எழுதுவதில்லை?

அந்திமழையில் கடந்த 25 வாரமாக – அதாவது ஆறு மாதமாக கேள்வி பதில் எழுதி வருகிறேன்.  25-ஆவது வாரம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த கேள்வி பதில்: http://andhimazhai.com/news/view/charu-25.html

புதிய எக்ஸைல் – ஒரு மதிப்புரை

எனக்கு நாவல் எழுதும் எண்ணம் எதுவுமில்லை. ஆனால் எழுதினால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் பாணியில்தான் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பாணிதான் எனக்கு ஒத்துவரும் என்றும் நம்புகிறேன். ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல்தான் இருந்தது. முதல் 75 பக்கங்களைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஜ்யோவ்ராமிடம் போனில் சொல்லவும் செய்தேன். ஆனாலும் தொடர்ந்து படிக்குமாறு சொன்னார். எங்கோ ஓரிடத்தில் திறப்பு வந்தது. பின்னர் முழுதும் உள்ளிழுத்துக்கொண்டது. மீன்கள், ஹில்சா, ஓ கல்கத்தா, கினோகுனியா,  ஒரே நேரத்தில் குடிக்க இரண்டு டீ … Read more

ஐ & என்னை அறிந்தால் விமர்சனம்

இயக்குனர் ஷங்கருக்கு நான் எழுதிய கடிதம் இன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வெளிவருகிறது. என்னை அறிந்தால் விமர்சனம் இன்றைய அந்திமழை இதழில் வெளியாகிறது.

திருப்பூர் புத்தக விழா

திருப்பூர் புத்தக விழா நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.  வரும் சனிக்கிழமை 7-2-2015 அன்று மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை திருப்பூர் புத்தக விழாவுக்கு வருவேன்.  வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவேன்.  என் புத்தகங்களில் மட்டுமே கையெழுத்து இடுவதற்கு வாசகர்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.  பிறரின் புத்தகங்களில் கையெழுத்திடுவதில்லை.

ஆங்கில வலைத்தளம்

charunivedita.com என்ற என்னுடைய ஆங்கில வலைத்தளத்துக்கு 31.1.2015 அன்று மதியம் மூன்று மணி அளவில்  600 பேர் வருகை தந்திருந்தார்கள்.  அன்று மாலை ஆறு மணி அளவில் 3500-க்கும் மேல் போய் விட்டது வருகை தந்து வாசித்தவர்களின் எண்ணிக்கை.  ஆக, என்னுடைய ஆங்கில வலைத்தளத்தை ஒரு நாளில் குறைந்த பட்சம் 3000 பேர் படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  முதல் நாளில் மூன்று மணி நேரத்தில் 3000 பேர் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது.   தொடர்ந்து … Read more