ஆங்கில வலைத்தளம்

charunivedita.com என்ற பெயரில் ஆங்கில வலைத்தளம் ஒன்று கொண்டு வரப் பட்டுள்ளது.  நண்பர்கள் படிக்கலாம்.  இதற்குக் காரணமாக இருந்த டாக்டர் ஸ்ரீராம், குரு, செல்வா மற்றும் நண்பர்களுக்கு என் நன்றி. http://charunivedita.com/2014/11/25/5/

திருப்பூர் & பெரம்பலூர் புத்தக விழா

ஜனவரி 30 முதல் ஃபெப்ருவரி 8 வரை திருப்பூரிலும், பெரம்பலூரிலும் புத்தக விழா நடைபெறுகிறது. புதிய எக்ஸைல், ராஸலீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் 1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். சாருவின் பிற புத்தகங்கள் உயிர்மை அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்க எண்: திருப்பூர் புத்தக விழாவில் அரங்கு எண் 77, 78; பெரம்பலூர் புத்தக விழாவில் அரங்கு எண் 30, 31. உயிர்மை அரங்கு எண்: திருப்பூர் புத்தக விழா அரங்கு … Read more

ஒரு வாரமாக ஆளைக் காணாமே?

ஒரு வாரமாக ஆளைக் காணோமே, சாருஆன்லைனில் எதுவும் எழுதவில்லையே என்று பல நண்பர்கள் எனக்கு எழுதிக் கேட்டிருந்தனர்.  ஆனால் நான் விசாரித்த வரை பெரும்பாலான நண்பர்கள் அந்திமழையில் வாராவாரம் நான் எழுதும் கேள்வி பதில் பகுதியையும், புதிய தலைமுறையில் வாராவாரம் எழுதும் தொடரையும் படிப்பதில்லை என்று அறிந்தேன்.  அந்திமழைக்கு லிங்க் தருகிறேன்.  புதிய தலைமுறை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் கடைகளில் கிடைக்கும்.  வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.  விகடனில் மனம் கொத்திப் பறவை எழுதிய போது எவ்வளவு உழைத்தேனோ … Read more

வாசகர் வட்டக் கூட்டம்

சமீபத்தில் நடந்த வாசகர் வட்டக் கூட்டம் பற்றி செல்வகுமார் எழுதியிருந்தது: அராத்துவும் சாருவும் இதர நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் (வழக்கம்போல) சற்று தாமதமாக அங்கே சென்றேன்.   மேஜையின் மீது பாப்கார்ன், தண்ணீர், திராட்சை (ரசம் இல்லை)…. அவ்ளோதான். சாரு சிரித்துக் கொண்டே ‘பாருங்க செல்வா, உங்களை மாதிரி, வெறுமனே இதையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’ என்றார் பிறகு ஓரிரண்டு நண்பர்கள் மது அருந்தினார்கள். சாருவிடம் சலனமே இல்லை. நண்பர்களுடன் சிறிது நேரம் கொடூரமாக ‘சராசரி லவ்கீக’ … Read more

முகத்தை அழிக்கும் முகநூல் : அராத்து பதில்

பத்திரிகையிலிருந்து சாகித்ய அகாதமி பரிசுக்காக எந்தெந்த நூல்களைப் பரிந்துரைப்பீர்கள் என்று கேட்டதும் அது இந்திய அளவிலானதா, தமிழ்நாடா என்று கேட்டேன் இல்லையா?  பரிசு தரும் நிறுவனங்கள் குறித்து எனக்குத் தெரிந்தது அவ்ளோதான். முந்தாநாள் அந்திமழையில் கேள்வி கேட்டிருந்த ஒரு அன்பர் உங்களுக்கு எதிராகத் தீவிரமாக இயங்குபவர்; அவருக்கெல்லாம் பதில் சொல்லலாமா என்று நண்பர் ஒருவர் கேட்டார்.  ”எனக்கு எதிரிகளைப் பற்றி எதுவுமே தெரியாது.  நண்பர்களை மட்டுமே அறிவேன்” என்று பதில் சொன்னேன். *** இரண்டு மாதமாக ஒரு … Read more

உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா

சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லீனா மணிமேகலை நடத்திக் கொண்டிருந்த திரை என்ற பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை பேசாமொழியில் திரும்ப எடுத்துப் பிரசுரம் செய்திருக்கிறார் அருண்.  இந்த முக்கியமான கட்டுரை என்னுடைய சினிமா புத்தகங்களில் தொகுக்கப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.  எழுதும் போது இருக்கும் உத்வேகமும் ஆர்வமும் அது பிரசுரமான பிறகு என்னுடைய ஆவணங்களில் தொகுத்து வைத்துக் கொள்வதில் இல்லாமல் போய் விடுகிறது.  இன்று ஐ படத்தில் மொக்கை போடும் ஷங்கர் பற்றிய விமர்சனமும் இந்தக் … Read more