புத்தகக் காட்சியில் சிற்றிரங்க விவாதத்தில் அடியேன்…

ஞாயிற்றுக் கிழமை 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன்.  ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது.  நாளைய நிகழ்ச்சியை அந்தக் கலந்துரையாடலாக மாற்றுவோம். பொதுவாக இது போன்று நான் கலந்து கொண்டு பேசும்  நிகழ்ச்சிகளில் வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்பதை கவனிக்கிறேன்.  கலந்து கொண்டால் எனக்கு ஒரு … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (2)

இன்றைய தினம் அந்திமழையில் வெளிவந்த கேள்வி பதில்: பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு கிளம்பியது போல் உங்கள் எழுத்துக்கு ஏதாவது எதிர்ப்பு கிளம்பியது உண்டா? தற்போதைய விவகாரத்தைக் கவனித்தீர்களா? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கவிமணி, சேலம். பதில்:  என்னுடைய எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பினால் ‘அப்பாடா, இப்போதாவது நம்மை இவர்கள் கவனிக்கிறார்களே, நம்மையும் ஒரு எழுத்தாளன் என்று அங்கீகரித்து எதிர்க்கிறார்களே!’ என நினைத்து சந்தோஷப்படுவேன்.   ஏனென்றால், தமிழக புத்திஜீவிகள், பிரமுகர்கள், சக எழுத்தாளர்கள் … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (1)

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா ஆச்சி, சலீம் கௌஸ் நடித்து 1992-இல் வெளிவந்து சக்கைப் போடு போட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் பிறகு பல ஆண்டுகள் கழித்து மாதொரு பாகன் என்ற பெயரில் ஒரு நாவலாக வெளிவரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  ஆனால் முடிவை மட்டும் ஆபாசமாக, வக்கிரமாக, பொய்யும் புரட்டும் கலந்து மாற்றி விட்டார் பெருமாள் முருகன்.  பத்தாண்டு காலம் தமிழில் எதுவும் படிக்காமல் இருந்தது நல்லது தானோ என்று … Read more