போர்ட்டர்கள் தேவை
நேற்று புத்தக விழா செல்ல கொஞ்சம் தாமதமாகி விட்டது. கிழக்கு அரங்கில் மாலை ஏழரையிலிருந்து ஒன்பது வரை இருந்தேன். பலருக்கும் கையெழுத்திட்டேன். அதற்கு முன்பாக உலகத் தமிழாராய்ச்சி மைய அரங்கம் சென்றேன். மிக அருமையான புத்தகங்கள் உள்ள அரங்கம். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே பதிப்பித்த தமிழ் ஆங்கில அகராதி நான்கு தொகுதி வாங்க எண்ணி வங்கி அட்டையை நீட்டினேன். வங்கி அட்டை ஏற்கப்படாது என்றார்கள். உடனே பக்கத்திலிருந்த நண்பர் 600 ரூபாயைக் கொடுத்து வாங்கிக் கொடுத்தார். … Read more