ஒன்பதாவது மாடியிலிருந்து…

அன்பிற்குரிய சாரு, அரூ சிறுகதைப் போட்டி குறித்து நேற்று நீங்கள் எழுதியுள்ள பதிவை வாசிக்க நேர்ந்தது. தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து என்கிற அந்தக் கட்டுரையின் வாயிலாக இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற இளைஞர்களின் கண்களை நீங்கள் திறந்துவிட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும்.  எல்லா கதைகளும் ஜெயமோகன் எழுதியது போலவே இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெ.மோ. போல ஒரு கதையாவது எழுதிவிட முடியுமா என கனவு காணும் எண்ணற்றவர்களின் மொழியிலும் அவர் பாதிப்பு தென்படவே செய்யும். யாரும் பிறந்ததும் சுவாசிக்க சொல்லிக் கொடுப்பதில்லை தான். ஆனால் … Read more

தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து

தொடர்ந்து இக்கால இளைஞர்களின் புனைவெழுத்துகளைப் படிக்கும்போது கசப்புணர்வே எஞ்சுகிறது. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இப்போது எழுத வருபவர்களுக்குத் தமிழே எழுதத் தெரியவில்லை. கடுமையான பிழைகள். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்களுடைய 10 சிறுகதைகளை ஒரு பிழையில்லாமல் திருத்தி – என்னென்ன பிழைகள் என்று கோடிட்டுக் காட்டி – பதினோராவது கதை எழுது என்று சொன்னால் முதல் கதையில் என்ன … Read more

வால்மீகிக்கு வந்த சந்தேகம்…

எனக்கு ஒரு தந்தை கடிதம் எழுதினார்.  ”நானும் என் மனைவியும் எங்கள் ரத்தத்தைச் சிந்தி பிள்ளையைப் படிக்க வைத்தோம்.  எங்கள் சக்திக்கு மீறி, எங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்து உயர் படிப்பு கொடுத்தோம்.  இப்போது வேலைக்குப் போய் அவன் எங்களை கவனிக்கவே இல்லை.  வயதான காலத்தில் கொடும் மன உளைச்சலாக இருக்கிறது.” அந்த நீண்ட கடிதத்தின் சாரம் இது.  நான் கேட்டேன், பிள்ளையைப் படிக்க வைத்ததை ”பிற்காலத்துக்கான சேமிப்பு” என்று நினைத்துச் செய்தீர்களா?  அல்லது, பிள்ளையின் மீது … Read more

ஓம் தன்னிலை மயம் ஜகத்…

ஒருவர் எதுவாகவோ இருக்கிறார். எதுவுமே அற்று இருக்க முடியாது. அவர் அப்படியே தன்னை வெளிப்படுத்தினால் அது இயல்பாக இருக்கும். மாறாக அவர் வலிந்து தன்னை ஒரு கலககாரனாக, ஞானியாக, புத்திஜீவியாக காட்ட முயன்றால் அது பொலியான பிம்பம் அல்லவா?  நரேஷ் கரினினாவின் மேற்கண்ட பதிவு. இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை.  முன்பு நான் ஜாக் தெரிதா படிக்க வேண்டுமானால் புத்தகம் கிடைக்காது.  கிடைத்தாலும் விலை 800 ரூ. இருக்கும்.  நம் சம்பளம் 500 ரூ. இருக்கும்.  அதனால் … Read more

மூவர்

இறையன்பு ஐ.ஏ.எஸ். காஞ்சீபுரம் கலெக்டராக இருக்கும் போதிருந்து என் நண்பர். காஞ்சீபுரத்தில் பகல் நேரத்தில் எல்லோரும் தறி நெய்யப் போய் விடுவதால் சிறுவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை என்று இரவுப் பள்ளியை ஆரம்பித்து சிறார்களை அந்தப் பள்ளியில் படிக்கச் செய்தார் இறையன்பு. இதை இறையன்பு என்னிடம் சொன்னதில்லை. அந்த இரவுப் பள்ளியில் படித்து பல பெரிய வேலைகளுக்குச் சென்ற நண்பர்கள் மூலம் பல ஆண்டுகள் கழித்து நான் கேள்விப்பட்டு இறையன்புவிடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே ஆமாம் … Read more

வாடிய உயிர்கள்…

பூனைகளுக்கான உணவை நான்கு நண்பர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.  அதுவும் போதாமல் போகும்போது எங்கள் குடியிருப்பு மேனேஜரை அனுப்பி நானே வாங்கிக் கொள்கிறேன்.  இதையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கே சில மணி நேரம் ஆகி விடுகிறது.  அதுவும் தவிர, அவந்திகா பூனைகளுக்கு உணவு தருவதற்காகக் கீழே செல்லும் போது பக்கத்து அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி தூஷணை வார்த்தைகளால் அவந்திகாவைத் திட்டுகிறார்.  காது கூசும் தூஷணை வார்த்தைகள்.  நம்முடைய குடியிருப்பில் வைத்துக் கொடுப்பதற்கு அவர் ஏன் திட்ட வேண்டும்?  பூனைகளால் ஆஸ்துமா … Read more