அவர் நல்ல பாடலாசிரியரும் இல்லை…

மதிப்பிற்குரிய திரு. சாருநிவேதிதா, /அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான்./சினிமாக்காரர்களுக்கு மிகையான இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும்போது அதை கண்டிக்கும் இலக்கியவாதிகள், இப்படி ஒரு வரியை சொல்லிவிடுவது வழக்காமாக இருக்கிறது.ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை? அவர் நல்ல பாடலாசிரியரா? இலக்கியக் களத்தில் செயல்படும் எழுத்தாளர்களை எத்தனைக் கறாராக தரமதிப்பீடு செய்வீர்களோ அப்படி நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டதா மேற்படி கருத்து?இரண்டாம் தர கலையான சினிமாப்பாடல் வரிகளை, உங்களுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாத துறையை, ஆழ்ந்து அலசி கருத்து … Read more

Pleasure of the Text

இடம் சார்ந்து எனக்கு எவ்வித நாஸ்டால்ஜிக் உணர்வுகளும் இல்லை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலை அருண்மொழி நங்கையின் சின்னச் சின்னப் புரட்சிகள் என்ற படைப்பைப் படித்து விட்டு என்னைப் பற்றி நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தது தவறு எனத் தோன்றியது. அல்லது, இதுவரை எந்த எழுத்தும் இப்படி எனக்குள் கீழத்தஞ்சை மண் பற்றிய உணர்வுகளைக் கிளர்த்தியது இல்லை. இப்படியெல்லாம் சொன்னால், இது ஏதோ ஊர் பற்றிய நினைவுக் குறிப்பாகக் குறுகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படியும் … Read more