அ-காலம் தொடர் பற்றி…

இன்று அ-காலம் தொடர் பற்றி ப்ரியதர்ஷினி செல்வராஜ் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். இதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. பிஞ்ஜ் டாட் இன்னில் வரும் அந்தத் தொடரை வாசித்துப் பாருங்கள்…

கர்ஜனையும் அழுகையும்…

எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு இல்லை என்று தெரிகின்றதல்லவா, பின் எதுக்காக தொடர்ந்தும் இந்த வகையான தாழ்வுச் சிக்கல் கட்டுரைகள்.  எழுத்தாளரை மதிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி எழுதுவது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது சாரு.  சீலேயில் மதித்தார்கள் என்பதற்காக, கேரளத்தில் மதித்தார்கள் என்பதற்காக எல்லா இடத்திலும் அப்படியே இருக்குமா என்ன. நான் இலங்கையைச் சேர்ந்தவன்.  எங்களது நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு ஆஹா ஓஹோ என்ற வரவேற்பு இல்லை. சிங்கள திரைப்பட நடிகர்களையும் இங்கே தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில்லை.  கிரிக்கெட் விளையாடுபவர்களை நாங்கள் … Read more

கேள்வி பதில்

https://www.facebook.com/Byngetamil மேற்கண்ட பிஞ்ஜ் தமிழ் முகநூல் பக்கத்துக்குச் சென்று என்னிடம் நீங்கள் கேட்கும் கேள்விகளில் சிறந்த ஐந்துக்கு நான் பதில் சொல்ல இருக்கிறேன். அதிலும் சிறந்த ஒரு கேள்விக்கு பிஞ்ஜ் குழுவினர் ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர். இன்று மாலை ஆறு மணிக்குள் கேள்விகள் வர வேண்டும்…

சினிமாவும் எழுத்தும்…

வணக்கம். எனது முந்தைய மின்னஞ்சலில் நீவிர் அதிகம் நேரம் செலவிடக் கூடாது என்பதனாலேயே அதில் சுருக்கமாக அறிமுகத்துடன் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி உங்களது எண்ணங்களை கேட்டபடி அதனை அமைத்திருந்தேன். அதனாலேயே நீங்கள் அவ்வாறு பதில் அளித்து இருப்பீர்களோ என்று தோன்றியது. பின் அதில் நான் சினிமாக்காரன் என்று குறிப்பிட்டு அதனால் கூட அவ்வாறு நீங்கள் பதில் எழுதிஇருப்பீர்கள் என்று தோன்றியது. பிறகு அம்மின்னஞ்சலில் நான் உங்களைப் பிடிக்கும் என்று நான் பதிவிட்டதை உங்கள் ப்ளாகில் உங்கள் எழுத்துப் பிடிக்கும் என்று தவறாக பதிவிட்டு விட்டீர்கள். … Read more

அ-காலம்

அநேகமாக என் எழுத்து வாழ்வில் ஏப்ரல் 2021 என்ற இந்த மாதம்தான் அதிகம் எழுதியிருப்பேன், அதிகம் படித்திருப்பேன்.  பக்கங்களில் கணக்கில் கம்மியாகத்தான் வரும்.  Bynge.in இல் எழுதி வரும் அ-காலம் தொடருக்காகத்தான் அப்படிப் படித்தேன், எழுதினேன்.  ஒரு கட்டுரை 1200 வார்த்தை.  ஐந்து பக்கம்.  இதை எழுத எனக்கு இரண்டு நாட்கள் எடுக்கும்.  நிறைய படிக்க வேண்டும். சில சமயங்களில் முழு நாவலையே படிக்க வேண்டும்.  பிறகு அதைப் பற்றி அஞ்சு பக்கம் எழுத வேண்டும்.  இப்படி … Read more

எழுத்து, படிப்பு…

என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது.  அதுவாக வரவில்லை.  கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள்.  இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன்.  இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள்.  நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன்.  14 மாதங்கள் முடிந்து விட்டன.  கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது.  எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது.  பெல்ட் … Read more