அ-காலம்

அநேகமாக என் எழுத்து வாழ்வில் ஏப்ரல் 2021 என்ற இந்த மாதம்தான் அதிகம் எழுதியிருப்பேன், அதிகம் படித்திருப்பேன்.  பக்கங்களில் கணக்கில் கம்மியாகத்தான் வரும்.  Bynge.in இல் எழுதி வரும் அ-காலம் தொடருக்காகத்தான் அப்படிப் படித்தேன், எழுதினேன்.  ஒரு கட்டுரை 1200 வார்த்தை.  ஐந்து பக்கம்.  இதை எழுத எனக்கு இரண்டு நாட்கள் எடுக்கும்.  நிறைய படிக்க வேண்டும். சில சமயங்களில் முழு நாவலையே படிக்க வேண்டும்.  பிறகு அதைப் பற்றி அஞ்சு பக்கம் எழுத வேண்டும்.  இப்படி … Read more

எழுத்து, படிப்பு…

என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது.  அதுவாக வரவில்லை.  கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள்.  இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன்.  இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள்.  நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன்.  14 மாதங்கள் முடிந்து விட்டன.  கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது.  எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது.  பெல்ட் … Read more

புதிய தஞ்சை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்…

எனக்கு ஜாதி மதம் இனம் தேசம் என்று எந்த அடையாளமும் இல்லை என்பதை நீங்கள் நம்பினால்தான் மேற்கொண்டு நான் எழுதுவதில் உங்களுக்கு ஈடுபாடு செல்லும்.  என் தாய்மொழி தமிழ் என்றாலும் இந்த உலகிலேயே அரபியைப் போல் ஒரு அழகான மொழி இல்லை என்பது என் கருத்து.  தமிழின் சிறப்பு அதன் புராதனத் தன்மையும், சங்கமும், அகத்தியமும், தொல்காப்பியமும், எல்லாமும்.  அதே சிறப்புகள் சம்ஸ்கிருதத்துக்கும் உண்டு.  ஆனால் கூடுதலாக தமிழ் இன்றும் மக்களின் மொழியாகவும் இருக்கிறது.   சம்ஸ்கிருதத்துக்கு ஆதியிலிருந்தே … Read more