கலா கௌமுதியில் மீண்டும்…

Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது.  அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை.  நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன்.  பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள்.  ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய்.  மாத்ரு பூமியில் மட்டும் … Read more

வயதும் புத்தியும்

நேற்று எழுதிய சிறிய குறிப்பில் கடைசியில் இப்படி எழுதியிருந்தேன். ”என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது.  உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும்.  சரியா?   வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.” முதலில் இருபத்தைந்து என்று எழுதி விட்டு, பிறகு, அதுவே அதிகம் என்று தோன்றி இருபது என்று இன்னொரு வாக்கியத்தைச் … Read more