பாலகுமாரனும் நானும்…

பாலாவுடனான என்னுடைய நட்பு பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. அதிகம் என்ன, எதுவுமே எழுதியதில்லை. அவரை ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்றே இலக்கியவாதிகளும் அறிவார்கள். அதில் தவறும் இல்லை. பாலகுமாரன் எழுதுவது ஏன் இலக்கியம் இல்லை என்று ஜெயமோகன் ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதை நீங்கள் வாசிக்க வேண்டும். ஆனால் பாலா எனக்கு எழுத்தைத் தாண்டிய ஒரு நண்பர். அவரைப் போன்ற பாசாங்கு இல்லாத, வெளிப்படையான மனிதரை நான் பார்த்தது அரிது. அன்பின் மொத்த வடிவம் … Read more

கர்மா

நான் எழுதிக் கொண்டிருக்கும் “அல்வாவினால் அடைந்த நிர்வாணம்” என்ற நெடுங்கதையைப் பதிவேற்றம் செய்ய சற்றுத் தயங்குகிறேன். எவ்வளவுதான் கற்பனையாக எழுதினாலும் இப்போது இருப்பவர்களின் சாயை தெரிவதால் நீதிமன்றத்துக்கு இழுத்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது? அதற்காகவெல்லாம் பயப்படவும் முடியாதுதான். கதைசொல்லி மட்டும் நிர்வாணமாக வந்தால் பரவாயில்லை. இன்னொரு ஆளும் நிர்வாணமாக வருகிறார். பெண் அல்ல, ஆண். உடனே Gay கதை என்று நினைத்து விடாதீர்கள். நேரம் காலமெல்லாம் வேறு வேறு. செக்ஸ் கதையும் அல்ல. உளவியல்ரீதியான கதை. … Read more

ஒரு புதிய செயலி, ஒரு புதிய பத்தி

https://bynge.in/ta/ இந்தச் செயலியில் சம்பந்தப்பட்டுள்ள இளைஞர்களை அவர்களின் பத்து வயதிலிருந்து நான் அறிவேன். குடும்ப நண்பர்கள். இதில் வாராவாரம் அ-காலம் என்ற தொடரை எழுதுகிறேன். இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கும். எட்டு அத்தியாயம் எழுதிக் கொடுத்து விட்டேன். தொடர் சுவாரசியமாகவும் நிலவு தேயாத தேசம் மாதிரியும் இருக்கும். படித்து விட்டுச் சொல்லுங்கள்.

திருச்சியில் என் புத்தகங்கள்…

திருச்சி புத்தகக் கண்காட்சியில் Jai Sairam அரங்கு எண் 63 and 64 இல் Zero degree மற்றும் எழுத்து பிரசுரத்தின் புத்தகங்கள் கிடைக்கும். என் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாயமான் வேட்டை: ஒரு ரகளை கடிதம்

சாரு எல்லாம் (மொதல்ல, “சாரு போன்ற எழுத்தாளர்கள் எல்லாம்”ன்னுதான் ஆரம்பிச்சேன்) எதை வேணாலும் எழுதலாம். எல்லாமே வாசிக்குறதுக்கு சுகம்தான். ஒருத்தனுக்கு நாக்குல சூலத்தால குத்தியிருக்கான்னா, இவருக்கு வெரல்ல முத்தம் குடுத்துருக்கா. மா.வே ஒரு கதையே இல்ல, அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் நீட்சி. சிம்ப்ளி, எ லைஃப் சைஸ் போர்ட்ரெய்ட்.  நமக்கு ‘புனைவு’ங்குறது, நம்பவே முடியாதபடி மிகைப்படுத்தப்பட்டதா இருக்கணும். அதுல நாம எப்பிடியாச்சும் அடிச்சிபிடிச்சி உள்ள நொழஞ்சி ‘சூப்பர் ஹீரோ’ வேசமோ, இல்ல சைடு ஆக்டிங்கோ குடுத்து … Read more