காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்…

நாம் நம்முடைய நுண்ணுணர்விலும் சுரணையுணர்விலும் ரொம்பவும் மழுங்கிப் போயிருக்கிறோம் என்று தோன்றுகிறது.   நானும் தொடர்ந்து பண விஷயத்தைப் பற்றி அலுக்கவே அலுக்காமல் எழுதிக் குவிக்கிறேன். ஆனால் பணத்தை ஏன் மனிதர்கள் தெய்வமாய்த் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது.   அமெரிக்கர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்குப் பார்க்கிறார்கள்.  அவ்வளவு ஏன், காதலிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்கு.  சமீபத்தில் Meital Dohan தன் … Read more

ஸ்ரீமிட்டாய் ஜாங்கிரியும் கருப்பட்டி ஹல்வாவும்…

அவர் ஒரு பெண் பதிப்பாளர்.  பார்க்கவும் சுமாராக இருப்பார்.  என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார்.  அதனால் புத்தக விழாவில் எனக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றை ஒரு நண்பர் வாங்கிக் கொடுக்க அதை என்னிடம் இன்னொரு நண்பர் மூலம் அனுப்பி வைத்தார்.  பெயர்களைக் குறிப்பிட்டால் வம்பு வந்து சேர்வதால் யாருக்கும் புரியாத மாதிரி கிசுகிசு பாணியில் எழுதி விட்டேன்.  யார் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள்.  கொடுத்து அனுப்பிய புத்தக பார்சல்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சிக்கு … Read more