எக்ஸைல்

ஒரு மாபெரும் வேலை முடிந்தது.  எக்ஸைல் நாவலின் பிழை திருத்தம் முடித்து விட்டேன்.  பிழை திருத்தம் மட்டும் அல்ல. எடிட்டிங்.  அதனால் கூர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது.  பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்து விட்டு அதிலிருந்து நான் முற்றாக வெளியே வந்து விடுவேன்.  அதைத் திரும்பப் படிக்க நேர்ந்தால் அது நான் எழுதியது அல்ல.  நான் அதன் வாசகன் மட்டுமே.  அதுதான் எப்போதும் என் அனுபவம்.  பொதுவாக ஸீரோ  டிகிரியைப் பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கிறேன்.  அடிக்கடி … Read more

hathway என்ற கொடூர நிறுவனம்

hathway broadband நிறுவனத்தினர் தினமும் எனக்கு 25 முறை தொலைபேசியில் அழைக்கிறார்கள். தெரியாத எண் என்பதால் எப்போதாவது எடுத்து விடுகிறேன். தினமும் 25 முறை. புது கனெக்‌ஷன் வேணுமா. ஏற்கனவே எடுத்து ஏன் விட்டுட்டீங்க. இப்படி. பத்து மெஸேஜும் வருகின்றன. அநேகமாக என்னைப் பைத்தியமாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நாள் பூராவும் 24 போன் அழைப்பை எடுக்கவில்லை. 25ஆவது அழைப்பை இப்போது எடுத்து விட்டேன். சார் ஹாத்வே கனெக்‌ஷன் வாங்கி ஏன் விட்டுட்டீங்க என்று … Read more

ஒரு தரிசனம்

பின்வரும் கதையை இன்று காலை லலிதா ராம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தில் எக்ஸைல் பிழைதிருத்த வேலையில் இருந்த நான் ராம் என்றதும் உடனடியாக எக்ஸைல் வேலையை நிறுத்தி விட்டுப் படித்தேன். ராமின் எழுத்துக்கு நான் பரம ரசிகன். கட்டுரையாகத்தான் இருக்கும். மேலே பார்த்தால் சிறுகதை என்று இருந்தது. அவர் கதை எழுதுவார் என்று எனக்குத் தெரியாது. பெயரைப் பார்த்தால் லலிதா ராம். படித்துப் பார்த்தால் தி. ஜானகிராமன் கதை போல் … Read more

எஸ்.ரா.வும் சைத்தானும்…

நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களுடைய முதல் விசிறி உங்கள் மனைவி என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களைப் போன்ற பரிதாபத்துக்கு உரிய ஜீவன் வேறு யாருமே இல்லை.  ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அம்மணமாக நடக்கும் காரியம் அது.  நான் இங்கே என்னுடைய தளத்தில் எழுதுவதை இறைவனின் கிருபையின் காரணமாக அவந்திகா படிப்பதில்லை.  படித்தால் என்ன ஆகும்?  ஒன்று, அவளுக்கு ஹார்ட் அட்டாக் அல்லது எனக்கு ஹார்ட் அட்டாக் வரும்.  சந்தேகமே இல்லை.  அந்த … Read more