hathway broadband நிறுவனத்தினர் தினமும் எனக்கு 25 முறை தொலைபேசியில் அழைக்கிறார்கள். தெரியாத எண் என்பதால் எப்போதாவது எடுத்து விடுகிறேன். தினமும் 25 முறை. புது கனெக்ஷன் வேணுமா. ஏற்கனவே எடுத்து ஏன் விட்டுட்டீங்க. இப்படி. பத்து மெஸேஜும் வருகின்றன. அநேகமாக என்னைப் பைத்தியமாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நாள் பூராவும் 24 போன் அழைப்பை எடுக்கவில்லை. 25ஆவது அழைப்பை இப்போது எடுத்து விட்டேன். சார் ஹாத்வே கனெக்ஷன் வாங்கி ஏன் விட்டுட்டீங்க என்று கேள்வி. இத்தனை கொடூரமான பிஸினஸ் கம்பெனியை நான் வாழ்வில் கண்டதில்லை. இப்படி 25 அழைப்புகள் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டிருக்கின்றன.