மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு (2)

பின்வரும் கடிதத்தை மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அன்பான சாரு. உங்களுடைய சமீபத்திய உரை கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உங்களிடம் பேசத் தோன்றியது. நீங்கள் பேசுவீர்களா எனத் தெரியவில்லை. வாய்ப்பிருப்பின் தங்கள் எண்களை அனுப்புங்கள். ம.நவீன் மலேசியா அன்புள்ள நவீன், என் தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கடிதங்களை அவர்களின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடுகிறேன்.  ஆனால் உங்களுடைய இந்தத் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டு, அதற்கு பதில் … Read more

திறமையும் திறமையின்மையும்…

ஸ்டாலினுக்கு ஒண்ணு ரெண்டு தெரியுமா, கூட்டல் கழித்தல் தெரியுமா, அவர் தந்தையைப் போல் இலக்கியம் தெரியுமா, யாகாவாராயினும் நா காக்க என்பதைத் தப்பு இல்லாமல் திருப்பி சொல்லத் தெரியுமா என்பதெல்லாம் முக்கியம் அல்ல. முதல் மந்திரி ஆவதற்கு இம்மாதிரி கணக்குப் பரிட்சை, மொழிப் பரிட்சையில் எல்லாம் தேற வேண்டிய அவசியம் இல்லை. அவர் மேயராக இருந்த போது சென்னை நிர்வாகத்தை நல்ல முறையில் செய்தார். அவர் தந்தை அளவுக்கு சூதனம் தெரியாதவர். அதுவே அவர் பலமும் கூட. … Read more

புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு…

நான் புத்தக விழாவுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே உங்கள் புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வரலாம். என் வீட்டைக் கண்டு பிடிப்பது மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கண்டு பிடிப்பதைப் போல. சாந்தோம் ஹை ரோடில் ஒரு பிரபலமான ஷோரூமின் மாடியில் இருக்கிறது என் அபார்ட்மெண்ட். எனக்கு ஒரு மெயில் போட்டால் முகவரியும் போன் நம்பரும் அனுப்புகிறேன். மாலை நான்கு மணியிலிருந்து எட்டரைக்குள் வந்தால் நலம். போன் நம்பரில் … Read more