சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

சிறுகதைப் பயிற்சிப் பட்டறை பற்றி நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன்.  வருகின்ற மே முதல் வார இறுதியிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.  வார இறுதியில் ஒரு நாள் – இரண்டு மணி நேரம் – வீதம் ஐந்து வகுப்புகள்.  ஐந்து வார இறுதி நாட்களில்.  மொத்தம் பத்து மணி நேரம்.  ஒரு சிறுகதை எப்படி உருவாகிறது?  சம்பவத்துக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?  சிறுகதையில் தவிர்க்க வேண்டியவை எவை?  இவற்றோடு தமிழின் சிறந்த சிறுகதைகள் பற்றிய உரைகள்.  உலகின் முக்கியமான … Read more

மாயமான் வேட்டை: ஒரு கேள்வியும் பதிலும்…

சாரு, மாயமான் வேட்டையின் மொழி இன்னும் சற்று அடர்த்தியாக இருந்திருக்கலாம் இல்லையா?  உங்களுடைய நேனோ, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள், உன்னத சங்கீதம் போன்ற கதைகள் வெகு அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டதுதானே?  மேலும், “கரும்புத் தின்னக் கூலியா?” போன்ற தேய்வழக்குகளை இந்தக் கதையில் பயன்படுத்த வேண்டுமா? காயத்ரி. ஆர். முதல் கேள்வி பற்றி சில நண்பர்கள் என்னிடம் முன்பே விவாதித்தது உண்டு.  அடர்த்தியான மொழி என்பது சிறுபத்திரிகைகளின் ஒரு தன்மை.  பெரும் வணிகப் பத்திரிகைகளின் தட்டையான மொழிக்கு … Read more