வெகுஜன எழுத்தும் இலக்கியமும்

எக்ஸைல் பிழைதிருத்த வேலையை முடிக்கும் தறுவாயில் இருந்தேன். இடையில் ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது.  ”பட்டுக்கோட்டை பிரபாகரை ஏன் இப்படி அடிக்கடி வம்புக்கு இழுக்குறீர்கள்?”  அடப்பாவிகளா, உங்களுக்கு எத்தனை ஆயிரம் தடவை சொன்னாலும் புரியவே புரியாதா?  எனக்கு ஜனரஞ்சக எழுத்தின் மீது எந்தப் பகையும் இல்லை.  எந்தப் புகாரும் இல்லை.  ஒரு சமூகத்தில் எல்லா மனிதர்களுமே நகுலனையும் ஆதவனையும் படித்துக் கொண்டிருக்க முடியாது.  எனக்கே பதினைந்து மணி நேரம் தொடர்ந்து எழுதினாலோ படித்தாலோ ஒரு பத்து நிமிடம் … Read more

எழுத்தாளனும் ஆன்மீகவாதியும்…

ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தத்துவவாதிகள்தான் இந்தியாவில் ஆன்மீகவாதிகளின் இடத்தில் இருப்பவர்கள்.  அங்கே ஆன்மீகவாதிகளுக்கு சமூகத்தை வழிநடத்தும் அளவுக்கு அதிகாரம் கிடையாது.   திருச்சபைகளின் அதிகாரம் ஒரு பக்கம் இருந்த போதிலும் தத்துவவாதிகளுக்கே அங்கே முதல் இடம்.  தத்துவவாதிகளின் பேச்சுக்குத்தான் அங்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.  இங்கே மோடிக்கும் ஜக்கிக்கும், மோடிக்கும் ரவி ஷங்கருக்கும் உள்ள உறவை நினைத்துப் பாருங்கள்.  ஜக்கிக்கும் ரவி ஷங்கருக்கும் சமூகத்தில் உள்ள ஸ்தானத்தை கவனியுங்கள்.  ஆதிகாலத்திலிருந்தே இந்தியாவில் இப்படித்தான் இருந்து வருகிறது. … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – ஒரு மதிப்புரை

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சாரு அவர்களுக்கு, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் வாசகர் கடிதம். கடந்த ஐந்து வருடங்களாக, சரியாகச் சொல்வதானால் என் கல்லூரியின் தொடக்க நாட்களிலிருந்து தங்களின் தீவிர வாசகன்.  தற்போது குடிமைப்பணித் தேர்வுக்காக தயார் செய்துகொண்டிருக்கின்றேன்.  உங்களது படைப்புகள் என்னில், எனது சிந்தையில், உலகை அணுகும்  பார்வையில், பிறவுயிரிகளை நேசிப்பதில் என்று அவை ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் அனேகம். அதைப் பற்றியெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் … Read more