மாயமான் வேட்டை: ஒரு ரகளை கடிதம்

சாரு எல்லாம் (மொதல்ல, “சாரு போன்ற எழுத்தாளர்கள் எல்லாம்”ன்னுதான் ஆரம்பிச்சேன்) எதை வேணாலும் எழுதலாம். எல்லாமே வாசிக்குறதுக்கு சுகம்தான். ஒருத்தனுக்கு நாக்குல சூலத்தால குத்தியிருக்கான்னா, இவருக்கு வெரல்ல முத்தம் குடுத்துருக்கா. மா.வே ஒரு கதையே இல்ல, அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் நீட்சி. சிம்ப்ளி, எ லைஃப் சைஸ் போர்ட்ரெய்ட்.  நமக்கு ‘புனைவு’ங்குறது, நம்பவே முடியாதபடி மிகைப்படுத்தப்பட்டதா இருக்கணும். அதுல நாம எப்பிடியாச்சும் அடிச்சிபிடிச்சி உள்ள நொழஞ்சி ‘சூப்பர் ஹீரோ’ வேசமோ, இல்ல சைடு ஆக்டிங்கோ குடுத்து … Read more

மாயமான் வேட்டை : செந்தூரம் ஜெகதீஷ் (முகநூலில்)

பல ஆண்டுகளாக சாரு நிவேதிதா வை அறிவேன்.ஆனால் உடன்படாமல் விலகி இருப்பேன்.வசீகரமானது அவருடைய தோற்றம். விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிவார்.அதை விட வசீகரமானது அவர் எழுத்து. மலையாளத்தில் தகரா போன்ற பரதனின் பிரமாதமான கலைப் படைப்பில் பிட்டு போட்டு பகல்காட்சியில் ஓட்டுவார்கள்.அது ஷகிலாக்களுக்கும் சிலுக்குகளுக்கும் முந்தைய காலம். அது போலத்தான் சாரு நிவேதிதா வின் எழுத்து என்று ஒரு கலவரமான மனநிலை இருக்கும். உயிர்மை கூட்டத்தில் ஒருமுறை உடல் பருத்த ஒரு மிக அழகான பெண்ணுடன் … Read more

பயிற்சிப் பட்டறை கட்டணம்

சிறுகதை பயிற்சிப் பட்டறைக்கு ஆறு அமர்வுகளுக்கு (மொத்தம் பத்து மணி நேரம்) 500 டாலர் என்பது அதிகம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் அப்படி வைத்தேன் என்றால், சி.சு. செல்லப்பா, க.நா.சு., கோபி கிருஷ்ணன், நகுலன், புதுமைப்பித்தன் போன்றவர்களைப் பற்றிய என்னுடைய நான்கு மணி நேர உரைகளின் – கோபி பற்றிய உரை ஏழு மணி நேரம் – காணொலிப் பதிவை என்னிடம் கொஞ்சம் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். அது … Read more

மாயமான் வேட்டை: எதிர்வினைகள்/ பதிவுகள்

சாரு சமீபமாக எழுதும் குறுங்கதைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவரின் புனைவுக்கும் அ-புனைவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதுதான் விமர்சிக்கப்படும் புள்ளி. எனக்கு அது விமர்சனமாக தெரியவில்லை. தன்னையே புனைவாக்குவது என்பது சுயபலிக்கு சமமாகும். தன்னை புனைதல் வழியாக தனக்கான வழியை வகுத்துக்கொள்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். நம்புவீர்களோ இல்லையோ… நேற்று சாருவின் ராஸலீலா நினைவுக்கு வந்தது. அதோடு தன் பயண அனுபவங்களை கதைகளில் சேர்த்துவிடுவேன் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. தென்னமெரிக்க பயணங்களை சாரு … Read more