மாறுவேடத்தில் இலங்கைப் பயணம்

Mihadஇன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப் பார்த்தேன். ”இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வருவது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சாருவை விரும்பாத ஒரு கூட்டம் புலம்பெயர் சூழலில் உள்ளது என்பதனால் ஒரு பரபரப்பு ஏற்படுத்த படுவதாக கருத முடியும். சாருவை விரும்பாமல் போவதற்கு அவர்களுக்கு ஏதோ காரணங்கள் இருக்கக் கூடும். அது சாருவின் எழுத்துகள் மீதானதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மீது அளவு கடந்த லயிப்பு ஏற்பட்டதில்லை. கடந்த … Read more

அதே கேள்வி, அதே பதில்…

அருஞ்சொல்லில் வரும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சமஸ் கேட்கிறாரே தவிர அவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. பொதுப்புத்தியில், பொதுச்சமூகத்தில் பலராலும் கேட்கப்படும் கேள்விகளையே அவர் முன்வைக்கிறார். அருஞ்சொல் உரையாடல் இதுவரை என்னை அறியாத பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதுவரை நான் நேரடியாக அறிந்திராத பல நண்பர்கள் எனக்கு ஃபோன் செய்தார்கள். இன்னும் ஓரிரண்டு வாரம் வரும் என்று நினைக்கிறேன். இன்று அந்த அருஞ்சொல் உரையாடல் பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கேள்வி பதில் … Read more

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-dont-follow

கோணங்கியின் அத்துமீறலும் அதிகாரத்தின் கொடுக்குகளும், எழுத்தாளர் என்ற சலுகையும்: அராத்து

”இவனுவங்களையெல்லாம் நடுத்தெருவுல நிய்க்க வச்சு சுடணும் சார்” என்பதிலிருந்து “எழுத்தாளனும் சைக்கிளுக்கு பங்ச்சர் போடுபவனும் ஒன்றுதான்” என்பது வரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அராத்து எழுதியிருப்பதோடு முற்றிலுமாக உடன்படுகிறேன். ஏனென்றால், அராத்து அதிகாரம் பற்றிப் பேசுகிறார். அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியமைத்து, பின்னர், அதைத் துஷ்பிரயோகம் செய்யும் நிலை. அதைப் பற்றித்தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். – சாரு இனி அராத்து: கோணங்கியின் பாலியல் அத்துமீறலைப் பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் … Read more

சுயவதை

சற்று நேரத்துக்கு முன் ஒரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் குடிப்பழக்கம் இல்லாதவர். கோவாவில் இருப்பதாகச் சொன்னார். பக்கத்திலேயே மற்றும் ஒரு நண்பர் ஏதோ உயர் ரக விஸ்கி அருந்திக் கொண்டிருப்பதாக மேலதிகத் தகவலையும் கொடுத்தார். இன்னொரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். ஏற்காட்டில் இருப்பதாகச் சொன்னார். அவரும் தான் அருந்தும் பானம் பற்றிய விவரத்தை நான் கேட்காமலேயே சொன்னார். பின்னர் கோவா போன நண்பர் சற்று விவரமாகப் பேசினார். கடல் அலை அடிக்கும் ஓரத்தில் அறையாம். அங்கே … Read more

எழுத்தாளன், புனிதன், மனிதன் : ஜெயமோகன்

நேற்று (வெள்ளிக்கிழமை) சமஸ் அருஞ்சொல் நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பினார். இரண்டு மணி நேரத்தில் 2000 வார்த்தைகளில் பதில்களைத் தட்டச்சு செய்து அனுப்பினேன். இன்று காலையில் ஜெயமோகனின் தளத்தைப் பார்த்தால் நேற்று நான் சமஸுக்கு அனுப்பிய பதில்கள் வேறு வார்த்தைகளில் வந்திருந்தன. ஏற்கனவே நான் பல முறை எழுதியவைதான். அவற்றையெல்லாம் நேற்று அருஞ்சொல்லுக்காகத் தொகுத்து எழுதியிருந்தேன். நேற்று ஜெயமோகனின் தளத்தில் வந்த ”பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்” என்ற கட்டுரைதான் ஜெ. இதுவரை எழுதியவற்றுள் ஆக மோசமான கட்டுரை. அதை நீக்கி … Read more