அருணாசலத்துக்கு வாழ்த்து

அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு … Read more

பாமரர் உலகம்

இங்கே தமிழ்நாட்டில் படிக்காதவர் பாமரர் அல்ல; அவருக்காவது கொஞ்சூண்டு காமன்சென்ஸ் உள்ளது. இங்கே பாமரர் என்ற பிரிவுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் சில பத்திரிகையாளர்களுமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாமரர் என் பெயரைக் குறிப்பிட்டு தமிழ் இந்து தினசரியில் அவதூறாக எழுதியிருந்தார். அதேபோல் ஒரு பேராசிரியரும் அடிமட்டித்தனமாக எழுதியிருந்தார். இருவருக்கும் பதில் கூறுவது என் வேலையல்ல, நான் இரண்டு நாவல்களை இப்போது ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த மூடர்களுக்கு பதில் சொல்ல நேரமும் இல்லை. … Read more

மொழிபெயர்ப்பு அவலம்

தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களை நான் படிப்பதே இல்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தால் இலக்கியமும் தெரியவில்லை, இலக்கியத் தமிழும் தெரியவில்லை. அதனால் அந்தப் பக்கமே நான் செல்வதில்லை. நேற்று அராத்து எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளை மேற்கோள் கொடுத்திருந்தார். அந்த நாவல் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்துள்ளது. அந்த நாவல் … Read more