விடுதலை : ஒரு பிளாஸ்டிக் அனுபவம்

வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும்.  பொதுவாக தமிழில் பொழுதுபோக்குப் படங்கள் என்பவை அருவருப்பாகவும் ஆபாசமாகவுமே இருக்கின்றன.  விஜய், அஜித், ரஜினி ஆகியவர்களின் படங்களை உதாரணம் சொல்லலாம்.  ஆனால் வெற்றிமாறன், மணி ரத்னம், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் பொழுதுபோக்கு சினிமாவே என்றாலும் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் தமிழில் இவர்களின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் … Read more

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-freedom

கொக்கரக்கோ எழுத்தாளனான கதை

கொக்கரக்கோவை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன்.  மனிதனாகப் பிறந்த ஜென்மங்கள் எல்லாமே அடுத்த மனிதனை இம்சை செய்வதற்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறோம் என்பது போல் பழகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொக்கரக்கோ மட்டும் யார் வம்புக்கும் போகாமல், யாரையும் இம்சை செய்யாமல் வாழ்ந்தான்.  அதனாலேயே எனக்கு அவனைப் பிடித்து விட்டது என்று சொல்லத் தேவையில்லை.  ஆனால் கொக்கரக்கோவிடம் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் எனக்குப் பிடித்தும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது.  பிடித்திருந்ததற்குக் காரணம், லௌகீகம்.  நான் லௌகீகத்தில் … Read more

ஒரு சின்ன விஷயம்

முன்பெல்லாம் எனக்கு நன்கொடை மற்றும் சந்தா அனுப்புபவர்கள் என் வங்கிக் கணக்குக்கே அனுப்புவார்கள்.  ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன.  அதன் காரணமாக, நண்பர்கள் உதவியுடன் ரேஸர் பே என்ற சாதனம் வழியாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தேன்.  ரேஸர் பே மூலம் அனுப்புவதற்கு எந்தச் சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  ஒரு பட்டனை அமுக்கி, தொகை எத்தனை என்பதைத் தெரியப்படுத்தினால் தொகை சம்பந்தப்பட்ட நபருக்குச் சேர்ந்து விடும்.  ஆனால் பாருங்கள், வங்கிக் கணக்கு மூலம் அனுப்பிக் கொண்டிருந்த … Read more

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-literature