5. தயிர்வடை சென்ஸிபிலிட்டி குறித்து அராத்து & அராத்துவுக்கு பதில்

பின்வருவது அராத்துவின் கட்டுரை: “அவர் மட்டும் அல்ல.  தி.ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க.நா.சு.,  ந. சிதம்பர சுப்ரமணியன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்ற சென்ற தலைமுறையின் பிராமண எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்திலுமே பிராமண அழகியலை நீங்கள் காண முடியாது.” – சாரு நிவேதிதா. இந்த இடத்தில் நான் சாருவிடம் இருந்து மாறுபடுகிறேன். பிராமண எழுத்தாளர்கள் என்றில்லை. தமிழில் எழுதிக்கொண்டிருந்த மற்றும் தற்போது  எழுதிக்கொண்டிருக்கும்  பெரும்பாலான எழுத்தாளார்கள் பிராமண அழகியல் என்று சாரு சொல்லும் தன்மையோடுதான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என்ன? … Read more

கிரேக்க வாழ்க்கை

கோரா தளத்தில் இதைப் படித்தேன். உங்களோடு பகிராமல் இருக்க முடியவில்லை. எழுதியவர் Debbie Todd. இதைப் படித்தபோது கிரேக்கத்தின் கிராமப்புறங்களில் சில மாதங்கள் சுற்ற வேண்டும் என்று தோன்றியது. இதேபோல் தமிழக கிராமங்கள் பற்றி எழுத முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். வாய்ப்பே இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் முடிந்திருக்கும். இப்போது முடியாது. காரணம், தமிழ்நாடு தன் ஆன்மாவை இழந்து போய் வெகு காலம் ஆகிறது. Q: How is Greece able to maintain … Read more

இன்று மாலைக்குள் ஒரு இலக்கிய அறிக்கை

இலக்கியம் பற்றிய என் அணுகுமுறை என்ன? இலக்கியத்தில் என் அடிப்படைகள் என்ன? – இந்த விஷயங்களைப் பற்றி இன்று எழுதப் போகிறேன். இது தயிர்வடை சென்ஸிபிலிட்டி அல்லது பிராமண அழகியல் என்ற என் கட்டுரைக்கு அராத்து எழுதியிருந்த எதிர்வினைக்கு பதிலாக அமையும். மாலைக்குள் முடித்து விடுவேன். இன்னொரு விஷயம். இந்தத் தளத்தை குறைந்த பட்சம் 8000 பேர் அதிக பட்சம் 10000 பேர் படிக்கிறார்கள். அவர்களில் 45 பேர்தான் சந்தாத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். 35 பேர் முந்நூறு … Read more