மதிப்பீடுகளின் வீழ்ச்சி: கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி

கமல்ஹாசனும் ஜெயமோகனும் ஹிந்து பத்திரிகைக்காக உரையாடிய ஒளிப்பதிவைப் பார்த்தேன்.  In conversation with actor Kamal Haasan and writer Jeyamohan என்பதுதான் அந்த உரையாடலின் தலைப்பு.  முதலில் இந்தத் தலைப்பே அருவருப்பானது, எழுத்தாளனை அசிங்கப்படுத்துவது.  ஏன்? நடிகர்கள் என்ன இருந்தாலும் கேளிக்கையாளர்கள்தான் (entertainers).  ஆனால் எழுத்தாளர்கள் அப்படி அல்ல.  நிரூபணங்கள் நிறைய உண்டு.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர்.  அவர் எப்படி வாழ்ந்தார் என்பது வரலாறு.  தங்கத் தட்டில் சாப்பிட்டவர்.  அவர் … Read more

தயிர்வடை சென்ஸிபிலிட்டி

இப்போது நான் எழுதப் போவது ஒரு கணித விளையாட்டைப் போன்றது.  சென்னையில் உள்ள பிஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் தலித் இலக்கியத்தை ஆய்வு செய்பவர்கள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒன்பது பேர் பிராமணராக இருப்பார்கள்.  அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  இது போன்ற ஒரு எண் ஆராய்ச்சி விளையாட்டைத்தான் இப்போது எழுதப் போகிறேன்.  இது நான் கண்ட உண்மை.  நான் கண்ட எதார்த்தம்.  நான் கண்ட அந்த எதார்த்தம் … Read more