14. என் கத்தி கடவுளையும் கூறு போடும்…

அராத்துவின் விளக்கம் படித்தேன்.  உறங்கச் செல்வதற்கு முன் அதற்கு ஒரு பதில்.  ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இந்த விவாதத்தினால் வாசகர்களுக்குப் பயன் உண்டாகுமே தவிர அராத்துவுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.  அவரைப் பொருத்தவரை இது வெட்டிவேலையாகவே இருக்கும்.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.  எனக்கு, மொழி உடல்.  உள்ளடக்கம் ஆன்மா.  ஆன்மா மட்டும் இருந்தால் அது ஆவி.  இரண்டுமே எனக்கு முக்கியம்.  இதற்கிடையில் நான் உடலை ஆராதிப்பவன் வேறு.  ஒரு அழகிப் போட்டிக்கு … Read more

13. சரஸ்வதி சொன்ன விபரீத கதை

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் வரலாற்றைப் புறக்கணித்து விட்டார்கள்.  உலகில் எங்கும் இப்படி நடந்ததில்லை.  கிரேக்கத்தில் சாக்ரடீஸ் பற்றியும், அவருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பு பிறந்த லெஸ்பியன் கவி Sappho பற்றியும் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு சிலைகள் இருக்கின்றன.  மேலை நாடுகள் முழுவதுமே கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசர்கள் போன்றோர் பற்றிய எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தாம்.  திருவள்ளுவர் மணமானவரா, துறவியா, ஹிந்துவா, சமணரா, எப்போது … Read more