பல காரணங்களால் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரது வெளிப்படையான கருத்துகள். யாரும் இத்தனை வெளிப்படையாகத் தங்களை முன்வைக்கத் தயங்குவார்கள். இருவருமே அப்படிச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ராம்ஜியின் கடைசி வாக்கியம். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரது படைப்புகளையும் வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது.
இன்று ராம்ஜியின் பிறந்த நாள் அன்று இந்த நேர்காணல் வந்திருப்பது மற்றொரு சிறப்பு. அநேகமாக இந்தப் பிறந்த நாளை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவருடைய முதல் நாவல் அல்லிக்கேணி வெளிவந்து சில தினங்களே ஆகியிருக்கின்றன. அந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால் நல்ல திறமையான இயக்குனர்களிடமே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்படி வைத்துக் கொள்ளலாம். கடைசியாக தொடர்ச்சியாக மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்தவர்களிடம் கொடுக்க வேண்டாம். அவர் ஃபைனான்ஸ் செய்தால் நானே இயக்குவேன். அவர் பிறந்த நாள் அன்று அதிர்ச்சி செய்திகள் கொடுக்க வேண்டாம் என்று தயங்குகிறேன்.