22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு செல்லலாம் என்று இருக்கிறேன். ஆனால் இப்போது தோன்றுகிறது, சென்றிருக்கலாம் என்று. பலருடைய அறிமுகம் கிடைத்திருக்கும். பிறகு கண்காட்சிக்கு சென்றால் வெறும் கண்காட்சியை மட்டுமே பார்க்கலாம். நாளை கிடைக்கக் கூடிய கோலாகலமான சந்திப்பு இருக்காது.

Ayọbámi Adébáyọ (Nigeria), Tash Aw (Malaysia), Hanan al-Shaykh (Lebanon), Chloe Aridjis (Mexican), Mauro Javier Cardenas (Ecuador), Akwaeke Emezi (Nigeria), Esther Freud (Britain), Rivka Galchen (Canadian), Daniel Galera (Brazil), Paolo Giordano (Italy), Uzodinma Iweala (Nigeria), Mieko Kawakami (Japan), John Keene (US), Daniel Kehlmann (Germany), Sheng Keyi (China), Katie Kitamura (US), Alexander Kluge (German), Hari Kunzru (UK), Hervé Le Tellier (French), Michele Mari (Italy), Ch’aska Anka Ninawaman (Peru), Charu Nivedita (India), Helen Olajumoke Oyeyemi (Nigeria), Tilsa Otta (Peru), Sidarta Ribeiro (Brazil), Cord Riechelmann (Germany), Salman Rushdie, Ekaterina Sedia (Russia), Leanne Shapton (Canada), Ahdaf Soueif (Egypt), Maria Stepanova (Russia), McKenzie Wark (Australia).